பக்கம்:பொன் விலங்கு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பொன் விலங்கு

போகிற கழுகுப் பார்வை. மரத்துணில் புடவையைச் சுற்றி வைத்துவிட்டு எதிரே ஒரு நாற்காலியைப் போட்டு உட்காரச் சொன்னால் உட்கார்ந்து மூன்று நாள் வாய் திறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாராயிருக்கிற அளவுக்குச் சரியான பெண் பிள்ளைக் கள்ளனாயிருப்பான் போலிருக்கிறது. இரண்டு நிமிஷம் நின்றுவிட்டு அம்மாவின் வார்த்தைகளையே மெய்யாக்குகிறவளாய்த் 'தலைவலி ரொம்ப அதிகமாயிருக்கு... நான் வரேன்" என்று நடைப் பிணமாய் மாடிக்குத் திரும்பினாள் மோகினி. திரும்பினவள் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு மாடப் பிறையில் கிடந்த பழைய டைரி ஒன்றிலிருந்து அரைத்தாளைக் கிழித்துப் பென்சிலால் அதில் ஏதோ எழுதலானாள். அப்போது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

சில வாழைத் தோட்டங்களில் வாழைக்காய் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப்போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலும் அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது. கசப்பான அநுபவங்களிலும் வெம்மையான சூழ்நிலைகளிலும் வெந்து தவித்துக் கொண்டிருந்த வளுக்குக் கிடைத்த ஒரே ஒரு நல்ல ஞாபகம் சத்திய மூர்த்தியாயிருந்தான். அன்றிரவு மோகினி அந்தப் பென்சிலையும் காகிதத்தையும் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாய்ப் போராடும் மனத்தோடு இருந்தாள். படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். வாழ விரும்பாதபோதும் வாழ்க்கையையே ஒரு கனமாக சுமையாக உணரும்போது சாவது கூடச் சுகமான காரியமாயிருக்கும்போல் தோன்றியது. கசப்புக்கும் வெம்மைக்கும் அப்பால் வாழ்க்கையின் இனிமைகள் பழுக்கலாம். ஆனால் அவளுடைய வாழ்க்கையில் இனிமை பழுக்கவேயில்லை. யாரோ ஒரு சத்தியமான மனிதருடைய நல்ல கைகள் சாவிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஞாபகத்தை மதிப்பதற்காக வாழவேண்டுமென்றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/278&oldid=595385" இலிருந்து மீள்விக்கப்பட்டது