பக்கம்:பொன் விலங்கு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 333

சமயங்களில் தலையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி அறைகிற அளவுக்கு அம்மாவின் கொடுமை எல்லை மீறிப்போயிருக்கிறது. இந்தக் கொடுமைகளில் இருந்தெல்லாம் விடுபடுவதற்கு ஒரே வழி சில்தான் என்று தீர்மானம் செய்துகொண்டு சாக முயன்றும் முடியாமல் பிழைத்திருக்கிறாள் அவள். பட்ட துயரங்களையும் இனிமேல் படவேண்டிய் துயரங்களையும் நினைத்தபோது அழுகை குமுறிக்கொண்டு வந்தது. -

கார் போய்க் கொண்டிருந்த சாலையின் இருபுறமும் வறண்ட செம்மண் மேடுகளாயிருந்தும் அந்த நிலவொளியில் அவைகளும் கூட அழகாகத்தான் தோன்றின. சாலைமேல் நடுநடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறுக்கிட்ட செழிப்பில்லாத கிராமங்கள் அரவமின்றி உறங்கிப்போயிருந்தன. சாலையும் சாலையின் இருபுறமும் செழிப்பும் பசுமையும் இல்லாமல் ஆனால் நிலவொளியால் வெளிப்பார்வைக்குச் செழிப்பும், பசுமையும் உள்ளதுபோல் மயக்கிக்கொண்டு அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படி இருந்தது. முன் nட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து அவன் தூங்கிவிடாமல் இருப்பதற்காகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார் கண்ணாயிரம். அம்மா அரைகுறை தூக்கத்தில் இருந்தாள். மோகினி இரைந்து அழப் பயந்து மெளனமாக அழுது கொண்டிருந்தாள். கார் போய்க் கொண்டிருந்த வேகத்தில் காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. கூந்தல் முன் நெற்றியில் சரிந்து புரண்டது. இருந்தாற்போல் இருந்து காரின் வேகம் குறைந்து சாலையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டு நின்றது. "டயரில் லாடம் அடித்துப் பஞ்சர் ஆகிவிட்டதுங்க" என்று கீழே இறங்கி டயரைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னான் டிரைவர். கண்ணாயிரமும் கீழே இறங்கினார். அம்மா விழித்துக்கொண்டு, "என்ன ஆச்சு? ஏன் நிற்கிறாங்க...' என்று விசாரித்தாள். டயர் பஞ்சராகிப் போச்சாம்' என்று பதில் சொல்லிக்கொண்டே மோகினியும் கீழே இறங்கினாள். -

அந்த இடத்தில் சாலையின்மேல் கார் நின்றுபோன பகுதியை ஒட்டி ஒரு சிறிய ஊருணியும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் நடுவாக ஒரு குடிசையும் தெரிந்தன. குடிசை வாயிலில் தென்ன்ை மரக் கீற்ற்ோர்ம் கதிர் விரிக்கும் அழகிய நிலாவின் கீழ் நார்க் கட்டிலில் ஓர் இளம் பருவத்துக் குடியானப் பெண்ணும் இளைஞனும் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். டயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/335&oldid=595510" இலிருந்து மீள்விக்கப்பட்டது