பக்கம்:பொன் விலங்கு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 337

இருந்தாள். அவளுடைய ஆத்தானோ கட்டுக் குடுமியும் காதில் சிவிப்புக்கல் கடுக்கனும் வாயில் புன்னகையுமாக ஆண் பிள்ளைச் சிங்கம்போல் அருகில் நின்று கொண்டிருந்தான். இவளுக்கு நான் காவல், இவள் என்னுடையவள் என்ற பெருமிதத்தோடும் ஆண்மையோடும் அவளுடைய அத்தான் அவளருகே நிற்பதுபோல் தோன்றியது. அதேபோல் சத்தியமூர்த்தி தன்னருகே வந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் போல அவள் தன் மனத்துள் அந்தரங்கமாகக் கற்பித்துக்கொண்டு மகிழ்ந்தாள். அந்தக் கற்பனையால் மகிழ்ச்சியும் அது கற்பனைதான் என்பதால் ஏக்கமும் அவளைத் தாக்கின. குடிசைவாசலில் கட்டிலில் உட்காரும்படி அந்தப் பெண் இரண்டு மூன்று முறை மோகினியை அழைத்தும் அவள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

'நீ ஏனம்மா வேலை மெனக்கெட்டுத் தொண்டைத் தண்ணி வத்துறே? இந்தக் குடிசையிலே நார்க் கட்டில்லே வந்து உட்காரச் சொல்லி அவுகளை நாம கூப்பிடலாமா?' என்று தன்னுடைய மெளனத்தை அலட்சியமாகப் புரிந்து கொண்ட அவளுடைய அத்தான் அவளைக் கண்டிப்பது போல் கோபிப்பதையும் மோகினி கவனித்தாள். அதற்கு மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாதவளாய் அந்தப் பெண்ணோடு நடந்துபோய் நார்க்கட்டிலில் உட்கார்ந்தாள் மோகினி. மோகினியுடன் அவளுக்கு இணையாகக் கட்டிலில் உட்காருவது மரியாதைக் குறைவு என்று கருதியவளைப்போல் அந்தக் கிராமத்துப்பெண்ம்ோகினிக்கு எதிரே அவள் கால்டியில் தரையில் உட்கார்ந்திருந்தாள். மேலே வந்து தன்னோடு கட்டிலில் உட்காரும்படி மோகினி எவ்வளவோ வற்புறுத்தியும் அந்தப் பெண் கேட்கவில்லை. மனிதர்களுக்கு விட்டுக் கொடுத்து மரியாதை செய்வதில்தான் இந்த நாட்டுப்புறத்து மக்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை? என்றெண்ணித் தன் மனத்துக்குள் அவளை வியந்தாள் மோகினி.

"தாகத்துக்கு எதுனாச்சும் மோர்-தண்ணீர் கொண்டாந்து தரட்டுமா அம்மா?' என்று மோகினியை ஆவலோடு விசாரித்தாள் அந்தப் பெண். மோகினிக்கு தாகமாக இருக்கவே, தண்ணீர் இருந்தால் போதும் என்றாள் அவள். உடனே அந்தப் பெண் உள்ளே எழுந்து போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். அந்தப் பெண் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்த பழைய காலத்து வெண்கலச் செம்பு இடியாகக் கனத்தது. அந்தத்தண்ணீர்ச்செம்பைப் போலவே வாழ்க்கையின் பண்புகள் அங்கே இந்த நாட்டுப்புறத்தில்

பொ. வி-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/339&oldid=595518" இலிருந்து மீள்விக்கப்பட்டது