பக்கம்:பொன் விலங்கு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பொன் விலங்கு

கனமாகவும் அழுத்தமாகவும் இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு. "நீங்க பயாஸ்கோப்பிலே ஆக்ட் பண்ணுறீங்களா அம்மர்?' என்று தண்ணீர்ச் செம்பைத் திருப்பி வாங்கிக்கொண்டே மோகினியைக் கேட்டாள் அந்தப் பெண். வாழ்க்கையே நடிப்பாகத்தான் இருக்கு. இன்னும் அது ஒன்றுதான் குறை என்று அந்தப் பெண்ணுக்கு மறுமொழி கூற நினைத்து அப்படிக் கூறுவதனால் ஒருவேளை அந்தப் பெண்ணின் மனம் புண்படலாமோ என்று தயங்கியவளாய் இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் மோகினி. அந்தப் பெண் தண்ணீர்ச் செம்போடு குடிசையின் உள்ளே நுழையவும் தொலைவில் தயங்கி நின்று கொண்டிருந்த அவளுடைய அத்தானும் பின் தொடர்ந்து வந்து அவளோடு உள்ளே சென்றான். அடுத்த சில விநாடிகளில் உள்ளேயிருந்து மெல்லிய பேச்சுக் குரல்களும் சிங்காரச் சிரிப்பொலிகளும் மாறிமாறி ஒலித்தன. கால் நாழிகைக்கெல்லாம் அந்தப் பெண் வெளியே வந்தபோது அவள்மேல் எதற்காகவோ தான் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது மோகினிக்கு. அந்தப் பொறாமையை அவளால் தவிர்க்கவும் முடியவில்லை. -

'ஊருணிக் கரையிலே அத்தான் வெள்ளரித் தோட்டம் போட்டிருக்காங்க. நல்ல பிஞ்சா ஒரு கூடை பறிச்சித் தரேங்கிறாங்க. ஊருக்குக் கொண்டுபோங்களேன்' என்று மோகினியை உபசாரம் செய்தாள் அந்தப் பெண். எதற்கு வீண்சிரமம்? வேண்டாம் என்று மோகினி மறுத்தும் அவளுடைய அத்தானும் அவளும் கேட்க வில்லை. அந்த நிலாவில் அவளிடம் கொடுத்தனுப்புவதற்கு வெள்ளரிப் பிஞ்சு பறித்துக்கொண்டு வருவதற்காகக் கூடையை எடுத்துக்கொண்டு ஊருணிக் கரையை நோக்கி நடந்தான் அவளுடைய அத்தான். காரில் அம்மாவும் கண்ணாயிரமும் கலியான வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த ஆப்பிள் பழங்கள் ஒரு கூடையில் நிறைந்துகிடந்தன.

மோகினி அவசரம் அவசரமாக எழுந்திருந்து போய் அந்தக் கூடையிலிருந்து நாலைந்து ஆப்பிள் பழங்கள்ை எடுத்துக் கொண்டு வந்து அந்தக் கிராமத்துப் பெண்ணிடம் கொடுத்தாள். இவற்றை வாங்கிக்கொண்டு அவள் மோகினியிடம் கேட்டாள். 'இதென்ன பழம் அம்மா?.நாங்க இதைப் பார்த்ததேயில்லை?" -

"இதோ, இதை ஆப்பிள்ம்பாங்க. நல்ல சத்துள்ள பழம், விலை அதிகம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/340&oldid=595522" இலிருந்து மீள்விக்கப்பட்டது