பக்கம்:பொன் விலங்கு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G96 பொன் விலங்கு

பளிரென்று புதிய வர்ணம் மின்னும் 'குமரப்பன் ஆர்ட்ஸ் என்ற விளம்பரப் பலகையை அருகில் சென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'இதெல்லாம் என்ன குமரப்பன் இந்த இடத்தை வாடகைக்குப் பேசி அட்வான்ஸ் வேறு கொடுத்திருக்கிறாயாமே? ரொட்டிக் கடைக்காரர் இப்போதுதான் சொன்னார்' என்று சத்தியமூர்த்தி சிரித்துக் கொண்டே நண்பனைக் கேட்டான். சத்தியமூர்த்தி இந்தக் கேள்வியைக் கேட்கும்போது சிரித்துக்கொண்டே கேட்டது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

"ஏன் சிரிக்கிறாய், சத்தியம்? இந்த மல்லிகைப் பந்தல் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் எத்தனை கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், தேயிலை, காப்பி எஸ்டேட்களும் பழத்தோட்டங்களும் இருக்கின்றன? ஒரு பெரிய கல்லூரியும் இருக்கிறது. இவ்வளவிற்கும் தேவையான போர்டுகள், டிசைன்கள், விளம்பர எழுத்துக்கள்-எழுதிக்கொடுப்பதற்கு என்னைப்போல் ஒரு நாணயமான தொழிலாளி இப்படி ஒரு கடை வைத்தால் தோற்றுப் போய்விடுவேன் என்றாநினைக்கிறாய்? தொழில் தெரிந்தவன்சும்மா இருக்கக்கூடாது. சும்மா இருக்கவும் முடியாது. எண்ணி இன்னும் பதினைந்தே நாட்களில் இந்தக் கடையைப் பார். இங்கே மாதம் முந்நூறு ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்படி தொழில் நடத்தவில்லையானால் என்னை ஏன் என்று கேள்' என்று சத்தியமூர்த்திக்கு மறுமொழி கூறிக்கொண்டே, 'இவ்விடம் சகலவிதமான விளம்பரப் பலகைகளும், டிலைன்களும் எழுதிக் கொடுக்கப்படும் என எழுதப்பட்டிருந்த மற்றொரு சிறிய விளம்பரப் பலகையை முன்பு மாட்டப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகைக்குக் கீழே வைத்து ஆணிகளை அடிக்கத் தொடங்கினான் குமரப்பன். நம்பிக்கையையும், தைரியத்தையும் முதலாக வைத்து என்னால் எந்தத்தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்ற தர்வத்தோடு அவன் காரியங்களைச் செய்வதாகத் தோன்றியது. குமரப்பனை அவன் போக்கில் விடுவதே நல்லதென்று சத்தியமூர்த்தி பேசாமலிருந்து விட்டான். காலாண்டுத் தேர்வும், நவராத்திரி விடுமுறையும் அருகில் நெருங்கிவிட்டதனால் சத்தியமூர்த்திக்கும் கல்லூரி வேலை அதிகமாக இருந்தது. இரவில் மாணவர்கள் விடுதி அறைகளில் ஒழுங்காகத் தங்கிப் படிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியிருந்தது. மாணவர்களை விடுமுறையில் வெளியூருக்கு அழைத்துச்சென்று சமூக சேவையில் பழக்கப்படுத்துவதற்காகவும் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/398&oldid=595638" இலிருந்து மீள்விக்கப்பட்டது