பக்கம்:பொன் விலங்கு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 பொன் விலங்கு

அவன் விவாதித்தபோது வேறொரு முதிய பேராசிரியரிடம் எந்தவிதமான அலட்சியம் எதிரொலித்ததோ அதே விதமான அலட்சியத்தைத்தான் இப்போது வார்டனிடமும் சத்தியமூர்த்தி கண்டான். கடமையைப் புறக்கணிக்கிறவர்கள் எத்தனை பெரிய பாவத்தைச் செய்கிறார்கள் என்றெண்ணி அவன் மனம் நொந்தான். தீர்த்தமாடுதல், தரிசனம் செய்தல், தர்மம் இதையெல்லாம் செய்யாதவர்களைக் காட்டிலும் பெரிய பாவத்தைக் கடமை தவறுகிறவர்கள் சுமக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. வார்டன் தன்னோடு ஒத்துழைக்காததைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அன்றிரவு சாப்பாடு முடிந்ததும் ஹாஸ்டல் வரை போய்ச் சுற்றிப்பார்த்து விட்டு வருவதாகக் குமரப்பனிடமும் சுந்தரேசனிடமும் சொல்லிக் கொண்டு டார்ச் லைட்டோடு தனியே புறப்பட்டுப் போனான் சத்தியமூர்த்தி. இரவு எட்டு மணிக்கு மேல் கல்லூரியின் அந்தப்பெரியகாம்பவுண்டில்துங்குமூஞ்சி மரங்களைத் தவிரக் கட்டிடங்களும் தூங்கினாற்போல் அமைதியடைந்து விடும். மலையடிவாரத்து அமைதியும், சில்வண்டுகளின் ஒசையுமாகத் தனிமையின் ஆழ்ந்த பயங்கரம் சூழ்ந்திருக்கும் விடுதிச் சுவர் ஒரமாகப் போய் நின்று காத்திருந்தான் சத்தியமூர்த்தி.

ஒன்பது மணிக்குமேல் இருளில் சரியாக அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத யாரோ இரண்டு மூன்று முரட்டு மாணவர்கள் அறைகளின் பின்புறம் பாத்ரும் குழாய்களின் வழியே இறங்கிச் சுவரேறிக் குதித்து வெளியே விரைந்தபோது, சத்தியமூர்த்தி ஒசைப்படாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான். கல்லூரி எல்லையைக் கடந்து அவர்கள் வெளியேற இருந்த கடைசி வாசல் அருகே சென்றதும், திடீரென்று பின்புறத்திலிருந்து அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நிலையில் டார்ச் ஒளியை அவர்கள் மீது பாய்ச்சி "நானும் உங்களோடு துணைக்கு வரட்டுமா தம்பிகளா?” என்று கேட்டு அவர்களைத் திகைத்து நிற்க வைத்துவிட்டான் சத்தியமூர்த்தி. 'நாங்கள் உங்களைக் கெளரவமான மாணவர்களாக நடத்த விரும்புகிறோம். ஆனால் நீங்களாகவே இப்படிச் சிறைக் கைதிகளைப் போல் நடந்து கொள்ள முயல்கிறீர்கள்' என்று அவன் மேலும் கூறிவிட்டு இன்னும் அருகில் சென்று அவர்கள் முகங்கள் தெளிவாகத் தெரியும்படி விளக்கை இட்டுப் பார்த்தான். அந்த மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தபடி அறைக்குத் திரும்பினர். சத்தியமூர்த்தியும் அவர்களோடு அறைக்குச் சென்று அவர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/404&oldid=595646" இலிருந்து மீள்விக்கப்பட்டது