பக்கம்:பொன் விலங்கு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 403

தங்கள் நிலையை உணரும்படி மனம் விட்டுப் பேசினான். அந்த மாணவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு திருந்தினார்கள். அன்று சத்தியமூர்த்திதன் அறைக்குத்திரும்பும்போது இரவு பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து ஹாஸ்டலில் அந்த மாதிரித் திருட்டுத் தனம் நிகழ்வது நின்றது. கடமையையும் உண்மையையும் போற்ற வேண்டுமென்று அவன் இவற்றைத் தானாகவே விரும்பிச் செய்தானே ஒழிய இவற்றுக்காக அவனை யாரும் பாராட்ட காத்திருக்கவில்லை.

米 ஒரு பெண் எதற்காகவும் வாய் விட்டு அழலாம். ஆனால் ஆண் பிள்ளை பல சமயங்களில் அப்படி அழ முடியாது. இதயத்தினால் மட்டுமே அழுவதற்கு (քգազմ,

k

பயன்கருதாமல் அந்தக்கல்லூரிக்கும் அதன்மாணவர்களுக்கும் எத்தனையோபலநற்பணிகளைத்தொடர்ந்து புரிந்துகொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவற்றையெல்லாம் பேராசிரியர்களும் கல்லூரி முதல்வரும் பாராட்டவில்லையானாலும் நாளுக்கு நாள் மாணவ மாணவிகளுக்கும் சத்தியமூர்த்திக்குமிடையே நெருக்கமும் பாசமும் அவற்றால் வளர்ந்து பெருகிக் கொண்டிருந்தது. சக விரிவுரை யாளர்களும், பேராசிரியர்களும், கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் இதற்காக அவன் மேல் அதிகமாகப் பொறாமைப் பட்டார்கள். அவனைப் பற்றி அதிகமாகப் புறம் பேசினார்கள். காலாண்டுத் தேர்வுக்கான பரீட்சைகளும் அவசர அவசரமாக நடந்து முடிந்தபின் இருபத்தைந்து மாணவர்களும், ஐந்து மாணவிகளும் சந்தனச் சோலை கிராமத்தில் மலை சரிந்து மண்மேவிப் போன சாலையைச் செப்பனிடச் சம்மதித்துக் கையொப்பமிட்டிருந்த தாளையும், சோஷியல் சர்வீஸ்'. 'ஒர்க் காம்ப்புக்கான திட்டத்தையும் எடுத்துக்கொண்டு போய், முதல்வரையும், பாலக்காட்டுப் பேராசிரியரையும் சத்தியமூர்த்திசந்தித்தபோது அவர்கள் மறுக்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/405&oldid=595647" இலிருந்து மீள்விக்கப்பட்டது