பக்கம்:பொன் விலங்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

米 ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். அதற்காகச் சில சமயங் களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது.

米 சில விநாடிகள் தன் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூசினாற்போல் பூபதி அவர்கள் கீழே குனிந்து சாய்வு நாற்காலி யிலிருந்தே கைக்கு எட்டும்படியாக மேஜைமேல் இருந்த காகிதக் கட்டு ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை சத்தியமூர்த்தியும் கவனித்தான். 'ஒழுக்கம் குன்றியும், வரன் முறை இன்றியும் தவறு செய்யும் இளைஞர்களின் தொகையைக்காட்டிலும் அதே விதமான தவறுகளைச் செய்யும் வயதானவர்களின் தொகைதான் அதிகமா யிருக்கும்போல் தோன்றுகிறது என்று சற்று முன்பு தான் துணிவாகக் கூறிய உண்மை எந்தவிதத்தில் அவருடைய மனத்தைப் புண் படுத்தியிருக்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

போலி நாகரிகத்துக்காகவோ, எதிரே இருந்து கேட்பவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடுமே என்பதற்காகவோ, நாவின் நுனியில் வந்து நிற்கும் எந்த உண்மையையும் இரண்டு உதடுகளுக்குள்ளேயும் அடக்கி வைத்துப் பழக்கமில்லை அவனுக்கு.

பொதுவாழ்க்கையில் அதிக நன்மையைத் தரமுடியாத இந்தச் சுபாவத்தினால் பலருடைய நட்பையும் உதவிகளையும் அவன் இழந்திருக்கிறான். குறைவோ, நிறைவோ, தாழ்வோ, ஏற்றமோ மனிதர்களோடு ஒத்துப் போவதற்கான குணம் அவனிடம் இல்லை என்று மாணவப் பருவத்து சக நண்பர்கள் பலர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவனிடம்.நேருக்கு நேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அவனைக் கடிந்து கொண்டுமிருக்கிறார்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/41&oldid=595652" இலிருந்து மீள்விக்கப்பட்டது