பக்கம்:பொன் விலங்கு.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 பொன் விலங்கு

"என்ன கேட்கப் போகிறீர்கள்? நீங்கள் எதைக் கேட்டாலும் தப்பாக நினைத்துக் கொள்ளப் போவதில்லை." -

"எதை நோக்கமாக வைத்து, எந்த விளைவை எதிர்பார்த்து இந்த அர்ச்சனை, பிரார்த்தனை எல்லாம் செய்கிறாய் மோகினி?" சிரித்துக்கொண்டே அவன் கேட்ட இந்தக் கேள்விக்கு அவள் உடனே பதில் சொல்லிவிடவில்லை. கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். மெல்லப் புன்னகை புரிந்தாள். பின்பு கூறினாள்:

"என்னுடைய பிரார்த்தனையும் அர்ச்சனையும் நான் எதிர்பார்த்ததைவிடப் பெரிய செளபாக்கியத்தை எனக்குக் கொடுத்திருக்கின்றன. உங்களைப் போன்ற உத்தமரை அடைவதற்கே நான் முன் பிறவியில் தவம் செய்திருக்க வேண்டுமே...?' என்று சொல்லி மறைய முயலும் நாணமும் மலர விரும்பும் புன்னகையும் நிறைந்த முகத்தால் அவனைப் பார்த்துக் கைகூப்பினாள் அவள். ஆஸ்பத்திரியில் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்படுமுன்தன் வீட்டிற்கே தான் இன்னும் போகவில்லை என்றும், மல்லிகைப் பந்தலிலிருந்து வந்து இறங்கியதும் நேரே ஆஸ்பத்திரிக்கு அவளைப் பார்க்க வந்ததாகவும் பேச்சுப் போக்கில் அவன் குறிப்பிட நேர்ந்தது. அதற்காகவும் அவள் அவனைச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

'உங்கள் ஞாபகத்தில் எத்தனை பெரிய இடத்தை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து எனக்கே பயமாக இருக்கிறது. நான் அவ்வளவு பாக்கியம் செய்திருப்பவளா? சொந்த வீட்டிற்குப் போகாமல் பெற்றோரையும், உடன் பிறந்த தங்கைகளையும் கூடப் பார்க்காமல் நேரே என்னைத் தேடிக்கொண்டு ஓடிவந்திருக்கிறீர்களே? இப்படிச் செய்யலாமா நீங்கள்?"

“என்ன செய்வது? காரணம் புரியாமலே சிலரிடம் நம் மன்ம் ஒன்றி விடுகிறது. அந்தச் சிலருக்காக நாம் தவிக்கிறோம், அழுகிறோம். ஏங்குகிறோம். சுற்றமும் சூழலும் படைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/418&oldid=595661" இலிருந்து மீள்விக்கப்பட்டது