பக்கம்:பொன் விலங்கு.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 417

வைத்துவிட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன. ஏதோ விட்டகுறை, தொட்டகுறை என்பார்களே அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களாக அர்ச்சனையும், பிரார்த்தனையும் செய்வதாகச் சொல்கிறாயே, மூன்று வருடங்களுக்கு முன் உன்னைப்போல் உடம்பும் மனமும் அழகிய பெண்ணொருத்தி இருப்பதாகவே நான் நினைத்திருக்க முடியாது. என்னைப் போல் உன்னைக் காப்பாற்ற ஒருவன் நடுவழியில் வருவேன் என்று நீயும் எதிர்பார்த்திருக்கமுடியாது. இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் வாழ்க்கையில் சில விஷயங்கள் முன்னும், பின்னும் முடிவும் இல்லாத தனித் தனி ஆச்சரியங்களாக மட்டுமே நிற்கின்றன."

"ஆச்சரியம் தான்? அந்தக் காலத்தில் ஆரம்ப நாட்களில் வழி சொல்ல வருவான் ஒருவன்' என்று தொடங்குகிற பதம் ஒன்றிற்கு அபிநயம் பிடிக்கிற போதெல்லாம் நான் என் மனத்திற்குள், நமக்கு வழி சொல்ல யார் வரப்போகிறார்கள்? என்று ஏக்கத்தோடு நினைத்துக்கொள்வேன்."

இதற்கு சத்தியமூர்த்தி ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால், அதற்குள் ஜமீன்தாரும் கண்ணாயிரமும் வார்டின் டாக்டரையும் உடன் அழைத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டார்கள். சத்தியமூர்த்தி கண்பார்வையினாலேயே அவளிடம் குறிப்பாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான். வாசலில் வெளிப்புறம் காத்திருந்த குமரப்பன் மிகவும் கோபமாக இருப்பதற்கு அடையாளமாக வந்து கை முஷ்டியைக் குவித்து மடக்கி, இடது உள்ளங்கையில் குத்தியபடி, குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தான்.

'காலிப்பயல்களாம்; காலிப்பயல்கள் அதைச் சொல்வதற்கு இந்தக் காலிப்பயல்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? குடி, சூதாட்டம், குதிரைப்பந்தயம் முறை தவறிய கேளிக்கைகள், விளையாட்டுகள், லீலைகள்-எல்லாம் இந்தக் காலிப்பயல்களிடம் தான் உண்டு. ஒரு தலைமுறையில் பிரான்ஸிலிருந்த ஃப்யூடலிஸ் வாழ்வின் (பிரபுத்துவ வாழ்க்கை) ஊழல்களை நையாண்டி செய்து

பொ. வி - 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/419&oldid=595662" இலிருந்து மீள்விக்கப்பட்டது