பக்கம்:பொன் விலங்கு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 - பொன் விலங்கு

எமிலி ஜோலாவும், பால்லாக்கும் இலக்கியம் எழுதின மாதிரி இந்த நாட்டிலும் இப்படிக் காலிகளை நையாண்டி செய்து யாராவது தைரியசாலிகள் இலக்கியம் படைக்க வேண்டுமடா சத்தியம்' என்று இதயம் குமுறும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே சத்தியமூர்த்தியோடுபுறப்பட்டிருந்தான்குமரப்பன். முதலில் அவர்கள் இருவரும் வடக்கு மாசி வீதிக்குள் புகுந்து சங்கீத விநாயகர் கோயில் தெருவுக்குப் போய் மோகினியின் பக்கத்து விட்டுச் சிறுவனிடம் வெள்ளிக்கிழமை அர்ச்சனை முறையை நினைவுபடுத்திவிட்டு அப்புறம் பேச்சியம்மன் படித்துறைத் தெருவுக்கு வந்தார்கள்.

சத்தியமூர்த்தியின் வீட்டை மாடியிலும் முன்பகுதியிலும் இடித்துக் கட்டிக் கொண்டிருந்ததால் அங்கே தங்குவதற்கு வசதியும் இடமும் மிகக் குறைவாக இருக்கும்போலத்தோன்றியது. குமரப்பன் டவுன்ஹால் சாலையில் இருக்கும் தன் நண்பன் ஒருவனுடைய அறையில் தங்கிக் கொள்வதாகவும், மாலையில் வந்து சத்தியமூர்த்தியை மீண்டும் சந்திப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றான். சத்தியமூர்த்தி வீட்டுக்குள் நுழைந்தபோது படியிறங்கி எங்கேயோ வெளியோறிக் கொண்டிருந்த தந்தை அவனைப் பார்த்ததும் அவனோடு பேசிக்கொண்ட உள்ளே திரும்பினார். சமையலறை நிலைப்படியில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த அம்மா மிகவும் இளைத்துத் தளர்ந்து போயிருந்தாள். அவள் பக்கத்தில் வெந்நீர்ப்பை, மருந்து பாட்டில்கள், அவுன்ஸ் கிளாஸ் என்று நோயாளியின் சூழ்நிலை உருவாகியிருந்தது. பிள்ளையைப் பார்த்ததும் அம்மாவின் தளர்ந்து வாடிய முகத்தில் மலர்ச்சி பிறந்தது. 'ஏண்டா சத்தியம், லீவுக்கு வரப்போவதாக ஒரு கடிதாசு கூடப் போடலியே நீ?" என்று பிள்ளையை வரவேற்று விசாரித்துவிட்டு உட்பக்கம் திரும்பி, 'ஆண்டாள் சத்தியம் அண்ணன் வந்திருக்குது... காப்பி. போடு" என்று குரல் கொடுத்தாள். ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து நூல் வேலை செய்துகொண்டிருந்த இன்னொரு தங்கை கல்யாணி மெல்ல எழுந்து வந்து அப்பாவை அண்டினாற்போல் நெருங்கி நின்று கொண்டாள்.

"நவராத்திரி விடுமுறை இன்னும் எத்தனை நாள் மீதமிருக்கிறது? இன்னும் ஒரு வாரம் இங்கு இருந்துவிட்டுப் போவாய் அல்லவா? நீ போன தடவை வந்திருந்தபோது லீவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/420&oldid=595664" இலிருந்து மீள்விக்கப்பட்டது