பக்கம்:பொன் விலங்கு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 419

இங்கே வரப் போவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஞாபகம். ஏதோ காலேஜ் பையன்களை அழைத்துக் கொண்டு சோஷல் செர்வீஸ் காம்ப்' போகப் போவதாகக் கூறியிருந்தாய். காம்ப்' போகவில்லையா?" என்று அப்பா கேட்டார்.

'காம்ப் நேற்றே முடிவடைந்துவிட்டது. இன்று மாலையில் முதல் பஸ்ஸிற்கு நானும் குமரப்பனும் புறப்பட்டு வந்தோம்" என்று தந்தைக்கு மறுமொழி கூறத் தொடங்கிய சத்தியமூர்த்தி குமரப்பன் மதுரையில் பார்த்துக்கொண்டிருந்த குத்துவிளக்கு கார்ட்டூனிஸ்ட் வேலையை விட்டுவிட்டதைப் பற்றியும், மல்லிகைப் பந்தலில் வந்து கடை வைத்திருப்பதைப் பற்றியும் தந்தையிடம் தெரிவித்தான். ஆனால் குமரப்பனைப் பற்றி அவன் கூறியவற்றைத் தந்தை அவ்வளவு சுமுகமாக விரும்பிக் கேட்கவில்லை. முகத்தைச் சுளித்து 'உச்சூக் கொட்டினார்.

'உதவாக்கரைப் பயல்களைப் பற்றியும் பிழைத்து உருப்படத் தெரியாதவர்களைப் பற்றியும் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது ரொம்பவும் திமிர் பிடித்துப்போய் அவன்இந்த வேலையைச்சரியாகப் பார்க்கவில்லையாம். கண்ணாயிரமும், ஜமீன்தாரும் அவனைச் சீட்டுக்கிழித்து அனுப்பிவிட்டதாகச் சொன்னாங்க... அவன் ஏதோ கண்ணாயிரத்தையும், ஜமீன்தாரையும் கேவலப்படுத்தறமாதிரிப்படம் எல்லாம் எழுதி அவர்களிடமே கொடுத்தானாமே?"

சத்தியமூர்த்தி தந்தைக்குப் பதில் சொல்லவில்லை. தந்தை கூறியதிலிருந்து குமரப்பன் அந்தக் காரியாலயத்தில் வேலை பார்க்க விருப்பமின்றி அவனாகவே இராஜிநாமாச் செய்த உண்மையைச் சற்றே திரித்து மாற்றி ஜமீன்தாரும் கண்ணாயிரமும் தாங்களாகவே அவனைச் சீட்டுக் கிழித்து அனுப்பிவிட்டதாகப் பொய் சொல்லித் திருப்திபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. தங்களுடைய சொந்தத் திருப்திகளையும் மகிழ்ச்சிகளையும் கூடப் பொய்யிலிருந்து தேடுகிறவர்களை நினைத்து, அவன் மனம் அந்த விநாடியில் பெரிதாக-மிகப் பெரிதாக நையாண்டி செய்து சிரித்தது. "ஆமாம், நீதான் காலையில் முதல் பஸ்ஸுக்கே வந்து விட்டதாகச் சொல்கிறாயே? வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று? பஸ் ஏதாவது தகராறு ஆகி நடுவழியில் நின்றுவிட்டதா?’ என்று தந்தையின் அடுத்த கேள்வி பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/421&oldid=595665" இலிருந்து மீள்விக்கப்பட்டது