பக்கம்:பொன் விலங்கு.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பாத்தாதி 481

அவளுக்குப் பதில் கூறலானான். 'உன்மேல் கோபப்பட்டு என்ன பயன்? நீ ஒரு பேதை உன்னைச் சந்திக்காமலிருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஓர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கண்கலங்க நேர்ந்திருக்காது."

"அப்படிச் சொல்லாதீர்கள் உங்களைச் சந்திக்காமலிருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது."

"வாழ்வதும் சாவதும் நம் கையில் இல்லை மோகினி பூபதிசிறப்பாகப் பேரோடும் புகழோடும் வாழ்வதற்குத்தான் பத்மபூரீ விருது வாங்கப் பறந்து பேரனார். பாவம் ஒரேயடியாக உலகத்தைவிட்டே போய்விட்டார். அவர் சாகவேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால் வாழமுடியாமல் போய்விட்டது."

"செய்தி தெரிந்தபோது எனக்கு ரொம்பப் பாவமாயிருந்தது. அவருடைய பெண் இங்கே கதறி அழுத குரல் கேட்டுக் காலையில் நான் பயந்தே போனேன்" என்று மோகினி கூறியபோது, "நீதான் ஜமீன்தாருக்கே பயப்படுகிறவளாயிற்றே? வெறும் அழுகுரலைக் கேட்டு ஏன் பயப்படமாட்டாய்?" என்று சத்தியமூர்த்தி நடுவில் குறுக்கிட்டு அவளைக் கேட்டான். இதைக் கேட்டு அவள் முகம் மேலும் வாட்டமடைந்தது. இந்தச் சொற்களால் அவளுடைய மென்மையான இதயம் தாக்கப்பட்டு விட்டது.

'இப்போது நீங்கள் கூறியதற்கு என்ன அர்த்தம்?" "நீ கெட்டவர்களைக் கண்டு பயப்படுகிறாய் என்று அர்த்தம்.' 'கொடிய புலிகளைப் பார்த்துப் பலமில்லாத மான்கள் நடுங்குவது தவறா?" -

'நடுங்கலாம். ஆனால்கோழையாயிருக்கக்கூடாது.கோழைகள் எதையும் தீர்மானமாக விரும்புவதற்கும் வெறுப்பதற்கும்கூடத் தகுதியற்றவர்கள். அவர்களால் எப்படித் தைரியமாகக் காதலிக்க முடியும்?" - х

"நான் உங்களை விரும்பித் தொழுவதற்குத் தைரியமில்லாமல் தொழவில்லை.நீங்கள் ஆஸ்பத்திரிக்குள் என்னைத்தேடிக்கொண்டு வருவது பிடிக்காமல்தான் ஜமீன்தார் அவசரம் அவசரமாக என்னை

பொ. வி-31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/483&oldid=595733" இலிருந்து மீள்விக்கப்பட்டது