பக்கம்:பொன் விலங்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் முன்னுரை

கல்கி பத்திரிகையில் இந்தப் 'பொன் விலங்கு' நாவல் நிறைவெய்தியபோது இந்நாவல் நம் தேசியக் கவி பாரதியின் லட்சியங்களையும், தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி நலத்தையும் சித்தரிப்பது பற்றிப் பல ஆயிரக் கணக்கான வாசகர்கள் மனமுருகிப் பாராட்டி எழுதினார்கள். அவர்களில் சிலருடைய அபிப்பிராயங்களையே இங்கு இந்த நாவலுக்கு முன்னுரையாகத் தொகுத்தளித்திருக்கிறேன். இது குடியரசுக் காலம். தரமான வாசகப் பெருமக்களின் அபிப்பிராயமே எதிர்கால முடிவும் நிகழ்காலத் துணிவுமாகும்.

எனவே ஏதாவதொரு இலக்கியப் பேராசிரியரிடம் முன்னுரை வாங்குவதைவிட அல்லது நானே முன்னுரை எழுதுவதைவிட, வாசகப் பெருமக்களிடமிருந்து வந்த கருத்துரைகளில் சிலவற்றையே இங்கு முன்னுரையாகத் தொகுத்து அளிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த நாவலை வெளியிட்ட கல்கி நிர்வாகிகளுக்கும், இது வெளிவருங் காலையில் இதனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்ட நண்பர் ஸோமாஸ் கந்தனார்க்கும், இதைப் புத்தகமாக வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பும் நன்றியும் என்றும் உரியதாகும்.

-நா. பா.

இந்நாவலின் முதற்பதிப்பில் வெளிவந்த அமரர் மணியம் அவர்களின் ஓவியங்களை தமிழ்ப் புத்தகாலயத்தின் இப்பதிப்பில் வெளியிட அனுமதியளித்த வள்ளுவர் பண்ணை திரு.பழநியப்பன் அவர்கட்கும் திருமதி மணியம் அவர்கட்கும் எமது நன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/5&oldid=1365934" இலிருந்து மீள்விக்கப்பட்டது