பக்கம்:பொன் விலங்கு.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 பொன் விலங்கு

சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காது. சத்தியமூர்த்தி எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வட்'. அவருக்குப் பொய்பேசத் தெரியாது. பொய்யாகப் புகழத் தெரியாது.பொய்யாக வாழ்த்த தெரியாது. அவரைப் பழிவாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. நீ வீட்டிலேயே இருக்கிறாய் ஜமீன்தாரும் பிரின்ஸிபாலும் அடிக்கடி உன் வீட்டில்தானே சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள்? உனக்குத் தெரியாதது எனக்கென்னடி தெரியும்?"

"வீட்டில் சந்தித்தால் எனக்கென்ன தெரிகிறது? நான் எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடக்கிறேன். அவர்கள் இன்னொரு மூலையில் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். ஜமீன்தார் மாமாவும் கண்ணாயிரமும் வந்து தங்கியபின் நான் வீட்டின் முன் பக்கத்துக்கு அதிகமா வருவதே கிடையாது. இன்னும் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என்னோடு இருந்துவிட்டு அப்புறம் ஜமீன்தார் இந்த ஊரிலேயே இருக்கிற அவரோட சொந்தப் பங்களாவுக்குப் போகப் போகிறார்" என்று பாரதி தன் தோழிக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருந்தபோது கார் டிரைவர் ஒரு கனைப்புக் கனைத்து விட்டு ஏதோ சொல்லத் தயாரானான். "பெரிய ஐயா...இந்த மலையிலே எஸ்டேட் வாங்கின நாளிலேயிருந்து நான் அவரிட்ட டிரைவரா யிருக்கேன் அம்மா! நீ குழந்தையாக இருந்த வயசிலேயிருந்து உன்னை எடுத்து வளர்த்திருக்கேன். உங்கிட்ட மெய் பேசாமற் போனாத் திங்கற சோறு என் வவுத்துல ஒட்டாது.ஆனாலும் இப்போ நான் சொல்லப் போறதை நான் சொன்னேனின்னு நீ யாரிட்டேயும் சொல்லப்படாது-நான் ஏழை. வல்லமை உள்ளவங்களை விரோதிச்சிக்கிட்டு வாழமுடியாதவன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு வர்ற விஷயத்தைக் கேட்டதினாலே அதைப் பற்றி எனக்குத் தெரிந்த நெசத்தை நான் உங்க கிட்டச் சொல்லிடனுமுன்னு தோணுது.பணத்துக்கும்.அதிகாரத்துக்கும் எதிராநெஜமும்,நியாயமும் கூடநிற்கிற காலமில்லேம்மா.இது." ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/540&oldid=595796" இலிருந்து மீள்விக்கப்பட்டது