பக்கம்:பொன் விலங்கு.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 539 "நீ என்ன சொல்லப் போகிறாய், முத்தையா?" என்று பாரதி வியப்போடு அந்த டிரைவரைக் கேட்டாள்.

"வேறொண்ணுமில்லையம்மா! நீங்க பேசிக்கிட்டிருக்கிற அதே விஷயம்தான்' என்று மேலே பேச வேண்டியதைப் பேசத் தயங்கினாற்போல் சிறிது நேரம் மெளனம் சாதித்தான் அவன்.

5@

ஒவ்வொரு பெண்ணின் அனுதாபமும் வேறெதையும் செய்ய முடியாதவரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும்.

டிரைவர் முத்தையா கூறிய செய்தியைக் கேட்டுப் பாரதி அப்படியே அதிர்ந்து போனாள். ஜமீன்தார் மாமாவை அவ்வளவு கெட்டவராக அவள் இதுவரை கற்பனை செய்தும் பார்த்ததில்லை. குளிக்காமல், சாப்பிடாமல் நாட்கணக்கில் சீட்டாட்டத்தில் உட்காருவார். குதிரைப் பந்தய சீஸனில் எந்தெந்த ஊரில் எல்லாம் பந்தயம் நடக்கிறதோ அங்கெல்லாம் போவார். கொஞ்சம் குடிப் பழக்கம் உண்டு. ஆனால் நியாயத்தையும் நேர்மையையுமே உறிஞ்சிக் குடித்து விடுகிற அளவுக்கு அவர் மிகப் பெரிய குடிகாரர் என்பதை இன்று டிரைவர் முத்தையா தெரிவித்த இந்தப் புதிய செய்தியால் அவள் திட்டமாகப் புரிந்து உணர்ந்து கொண்டு

முந்திய தினம் இரவில் இதே காரில் டிரைவர் முத்தை யாவையும் உடன் வைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் காரில் போகும்போதே.ஹாஸ்டல் கூரை ஷெட்டில் நெருப்பு வைத்துவிட ஏற்பாடு செய்துவிட்டு அந்தப் பழியை சத்தியமூர்த்தியின் தலையில் சுமத்திக் கல்லூரியிலிருந்த அவனை வெளியேற்றிவிடுவது என்று சதித்திட்டம் வகுத்துப் பேசிக்கொண்டு போனார்களாம்.அந்தச்சதிப்பேச்சைத்தன் இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/541&oldid=595797" இலிருந்து மீள்விக்கப்பட்டது