பக்கம்:பொன் விலங்கு.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 பொன் விலங்கு

நிர்வாகத்திற்கும் நடுவேயுள்ள வேறுபாடு பற்றியோ தகவல் தெரிந்து அல்லது பத்திரிகைகளில் நான் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வெளியானதைப் பார்த்துப் பதறிப் போய் உடனே புறப்பட்டு வந்துவிட்டாரோ?-என்றுதான் அவரைப் பார்த்ததும் நினைக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

உடனே கீழே படியிறங்கிப் போய், 'வாருங்கள்' என்று தந்தையை வரவேற்றவனுக்கு பதில்கூடச் சொல்லாமல் உள்ளடங்கிய ஆத்திரத்தோடு மேலே படியேறி வந்தார் அவர், மிகவும் கோபமும் கொதிப்பும் அடைந்து வெறுப்போடு வந்திருக்கிறார் என்பது அவர் பதில் சொல்லாமல் படியேறி வந்ததிலிருந்தே தெரிந்தது. - -

'பிழைக்க வந்த இடத்தில் அதிகாரமுள்ளவங்க யாரோ அவங்க தயவைச் சம்பாதிச்சுக்கிட்டு, வேலையை ஒழுங்காகப் பார்த்து மாதம் முடிஞ்சா சம்பளத்தை எண்ணி வாங்கறதை விட்டுப்பிட்டு இதெல்லாம் என்னடா அசிங்கம்? நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா? என்று அறைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகச் சத்தியமூர்த்தியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ மேல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இரைந்தார் அவனுடைய தந்தை,

"என்ன நடந்திருக்கிறது என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள் அப்பா ஒருத்தருடைய தயவைச் சம்பாதிக் கனும் என்பதற்காக நியாயத்தை விட்டுவிடமுடியாது. முறை தவறி நான் எதையும் செய்யவில்லை..." .

"மகா நியாயத்தைக் கண்டுபிட்டே நீ.என்னமோ. இதெல்லாம் சிறு பிள்ளைத்தனம் பொடிப் பசங்க கைதட்டறாங்கன்னு இன்னிக்குச் சந்தோஷப்பட்டுக்கலாம். நாளைக்கு வேலை போனப்புறம் தெருவிலே நின்று வயிறு காய்ந்தால் அப்போ அதிகாரம் யாரிட்ட இருக்கோ அந்தப் பெரிய மனுசங்க தயவுதான் வேண்டியிருக்கும்..." - . X

"எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் அப்பா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/570&oldid=595829" இலிருந்து மீள்விக்கப்பட்டது