பக்கம்:பொன் விலங்கு.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 569

"அதுதான் பேப்பர்ல எல்லாம் வந்திருக்குதாமே எனக்கு ஒரு எழவும் தெரியாது. ஜமீன்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரைக் காரிலே மதுரைலேர்ந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு வந்தேன். வந்தா இங்கே நீ பண்ணியிருக்கிற கூத்தையெல்லாம் சொன்னாங்க. ஏதுடா ஏழைக் குடும்பமே...கலியாணத்துக்கு ரெண்டு தங்கச்சி நிற்கிறதே? ஒண்ணையும் நீ உணர்ந்ததாகத் தெரியலே. ஜமீன்தார் ரொம்பப் பொல்லாதவரு. மனசிலே வைரம் வைச்சார்னா அவ்வளவுதான்...”

"ஆனால் நியாயம் அவரைவிடப் பொல்லாதது அப்பா."

'இதோ பாருடா... உன்னையெத்தானே? உன்னோட வாதாட்றதுக்கு இங்கே நான் வரலே...நான் சொல்றதெக் கேளு...'ஏதோ தெரியாத்தனமாகப் பையன்களை ஸ்டிரைக்குக்குத் தூண்டிப்பிட்டேன். நான் ஹாஸ்டல் ஷெட்டுக்குத் தீ வைக்க தூண்டினதும் தப்புத்தான். இந்த ஒரு தடவை மட்டும் என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னித்துத் தொடர்ந்து வேலை பார்க்க வழி செய்யணும்னு. இதிலே நீயே வேண்டிக்கிறாப்பலே அவர்களே டைப் அடிச்சுக் கொடுத்திருக்காங்க...மூச்சு விடாம இதிலே ஒரு கையெழுத்துப் போடு. ஜமீன்தார் காலேஜ் நிர்வாகி என்கிற முறையிலே இதை வாங்கி இரகசியமாக பைலிலே போட்டுப்பிட்டு உன்னை மன்னிச்சிடுவாரு. அதுக்குத்தான் நான் வந்திருக்கேன். ஜமீன்தாரும் கண்ணாயிரமும் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. கண்ணாயிரத்திடம் கடன் வேறே பட்டிருக்கோம். வீணா அவர்கள் முகத்தை முறிச்சிக்கப்படாது. சொல்றதைக் கேளு?" என்று தந்தை நீட்டிய டைப் செய்த காகிதத்தை வாங்கி அவரே எதிர் பார்த்திராதபடி கோபத்தோடு சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான் சத்தியமூர்த்தி. - .

'மன்னிக்க வேண்டும் அப்பா உங்கள் ஜமீன்தாரிடம் போய் என் மகன் அடங்காப்பிடாரி. அவன் நான் புத்திமதி கூறியும் கேட்கவில்லை' என்று சொல்லி விடுங்கள். என்னை வீழ்த்திட வேண்டுமென்று அவர்களே ஹாஸ்டல் ஷெட்டிற்கு நெருப்பு வைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை என்னை இழுத்தடித்திருக்கிறார்கள். நான் நியாயம் கிடைக்கிறவரை சும்மா விடமாட்டேன்..." என்று அந்த டைப் செய்த தாளைக் கிழித்தெறிந்த கையோடு அவன் கைகட்டி நிமிர்ந்து நின்றுகொண்டு பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/571&oldid=595830" இலிருந்து மீள்விக்கப்பட்டது