பக்கம்:பொன் விலங்கு.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 - பொன் விலங்கு

இந்த நாட்டியக்காரி மோகினியைத் தான் ஏற்கெனவே மணந்து கொண்டுவிட்டது போன்ற ஒரு நெருக்கமான உரிமையைப் பெற்றிருப்பதாகவும், இனி அந்த உரிமையை அதிகாரபூர்வமாக அடைவதற்காக அவளைப் பதிவுத் திருமணமே செய்து கொண்டுவிடக் கருதியிருப்பதாகவும், ஜமீன்தார் மாமா தன் தந்தை பூபதி உயிரோடிருந்தபோது அவரிடம் மதுரையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்ததை நினைத்து, மனம் குழம்பினாள் பாரதி. ஜமீன்தாரும் தன் தந்தையும் முன்பு இதைப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து மோகினியை ஜமீன்தாரோடு தொடர்புபடுத்தியே நினைக்கத் தொடங்கியிருந்தாள் பாரதி. மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்ட பின்னே பாரதியின் இந்த நினைப்பு படிப்படியாக மாறியது. மல்லிகைப் பந்தலில் வந்து தங்கியதன் சில தினங்களுக்குள்ளேயே மோகினி ஜமீன்தாரையும் கண்ணாயிரத்தையும் அடியோடு வெறுப்பதையும் பாரதி புதிதாகப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த நாட்டியக் கலையரசியின் இதயம் எங்கே ஆட்பட்டிருக்கிறதென்பது இன்று இந்த விநாடியில் பாரதிக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் மோகினியின் லாபம் தன்னுடைய நஷ்டமாயிருப்பதை உணர்ந்து வேதனைப்பட்டுத் தவிக்காமல் இப்போது அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. காரில் அவள் கண் கலங்கி அழுவதைப் பார்த்து-இறந்துபோன தந்தையின் நினைவாக அழுகிறாள் என்று டிரைவர் முத்தையா எண்ணிக் கொண்டான். பாரதியோ லேக் அவென்யூ வருவதற்குள் அழுகையோடு அழுகையாக ஆவலையும் அடக்கிக் கொள்ள முடியாமல் அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை அவசர அவசரமாக எடுத்துப் படித்து விட்டாள். ஒவ்வொரு முறை படித்து முடித்தபோதும் அவளுக்குத் தவிர்க்க முடியாத அழுகை குமுறிக்கொண்டு வந்தது. கடிதமோ மனப்பாடமே ஆகிவிட்டது.

'மல்லிகைப் பந்தல் பட்டுப்புடவைக் கடையில் என்னை ஜமீன்தாரோடு சேர்த்துப் பார்த்ததைத் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது. மறுக்க முடியாத காரணத்தால் மறுக்க முடியாத சூழ்நிலையில் அவரோடும் கண்ணாயிரத்தோடும் நான் கடைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/604&oldid=595867" இலிருந்து மீள்விக்கப்பட்டது