பக்கம்:பொன் விலங்கு.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாவல்

இந்த மறுமலர்ச்சி யுகத்தில் காவியங்கள் ஏற்படாவிடினும், பொன் விலங்கைப் போல, சமுதாய வழிகாட்டியான நாவல்களே அழகிய காவியங்களின் இடத்தைப் பெறுவன. பொன் விலங்கு பல யுகங்கள் வாழும், வாழ்விக்கும்.

O இரா. நரசிம்மன், பெங்களுர்-17

இப்படிப்பட்ட சிறந்த ஒரு காவியத்தைப் படைப்பித்துத் தமிழ் மக்களின் எண்ணங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்ட மணிவண்ணன் அவர்களை நான் புகழப்போவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு பூரணியையும் ஒரு அரவிந்தனையும் படைப்பித்து வாசகர்களுக்கு மத்தியில் நடமாட விட்டதின் மூலம் புகழக்கூடிய

நிலையிலிருந்து மேலே போய்விட்டார்.

- O இரா. சேஷன், சென்னை-2

அருமையான இரு பெண் படைப்பு அதில் ஒருத்தி 'இன்பம்" என்னவென்று அறியும் முன்னே இறந்து விட்டாள். மற்றொருத்தியை இன்பத்தை அனுபவிக்க முடியாமலே செய்து விட்டார் மணிவண்ணன்.

O 20.3.64 ச. சுபாஸ் சந்திரன், நெல்லை.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன். தூய்மையான காதலைத் தியாகம் செய்த பாரதி, அறிவுத்திறன் படைத்த பூபதி, உயர்ந்த கொள்கைகளுடைய உண்மை நண்பன் குமரப்பன் ஆகிய ஒவ்வொரு சிருஷ்டியும் ஆசிரியரின் கற்பனை வளத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றன.

O 213.64 பி.ஆர். கிருஷ்ணன், சென்னை-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/688&oldid=595959" இலிருந்து மீள்விக்கப்பட்டது