பக்கம்:பொன் விலங்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பொன் விலங்கு

சத்தியமூர்த்திக்கு எதிராய் எல்லாருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்வதுபோல் அவர்கள் மேல் ஒரே வெறுப்பாக இருந்தது அவளுக்கு. காலையில் தன் பட்டுப்பாதங்கள் பதிய அந்த காம்பவுண்டுக்குள் நடந்து வந்து தந்தைக்கு முன் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் கணிரென்று மறுமொழி சொல்லிவிட்டுப் போன அந்தத் தைரியசாலியின் முகத்தை மீண்டும் நினைவுகூர முயன்றாள் அவள். நினைத்து தவிக்கிறவர்களுக்கு அதிகம் சோதனை செய்யாமல் அருள் செய்து விடுகிற சில நல்ல தெய்வங்களைப் போல் அவள் நினைத்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது அந்த எழில் முகம். அளவாகவும் அழகாகவும் பேசும் அந்தக் குரல், சத்திய வேட்கை நிறைந்த அந்த முகம் "சுசுதுக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓர் அடிமுன்னால் எடுத்து வைக்க எப்போதும் நான் தயார்’ என்பதுபோல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்காரும் அவனுடைய வனப்பு, எல்லாம் நினைவு வந்தன அவளுக்கு. அவள் நெட்டுயிர்த்தாள். தன் நினைவு இதுவரை அடைந்திருந்த இனிய ஞாபகங்களையும் இனி அடைவதற்கிருந்த இனிய ஞாபகங்களையும் அந்த வீட்டின் முன் அறையில் அப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் தந்தையும், கல்லூரி முதல்வரும் சேர்ந்து பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எண்ணி மனம் நலிந்தாள் அவள். போதாத குறைக்கு இப்போது ஹெட்கிளார்க் வேறு கூட வந்திருக்கிறார். 'எல்லோருமாகச் சேர்ந்து என்ன முடிவுக்கு வரப்போகிறார்களோ? ஒருவேளை இப்போது இரண்டாவதாக வந்திருக்கும் இந்த மனிதரே தமிழ் விரிவுரை யாளராவதற்குத் தகுதியானவர் என்று இவர்கள் எல்லோரும் ஒரு மனமாகத் தீர்மானம் செய்துவிட்டால்...?

இப்படி நினைத்தபோது அவள் சிந்தனை மேலே ஒன்றும் எண்ணத் தேர்ன்றாதபடி இருண்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கவும் விருப்பம் கொண்ட அவள் ஒரு காரியமும் இல்லாமலே தந்தையின் அறைக்கு அடிக்கடி போய்விட்டு வந்தாள். கடுவன்பூனை மாதிரி முகம், கொலைக்களத்து வெட்டரிவாளைப் போன்ற பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/84&oldid=595979" இலிருந்து மீள்விக்கப்பட்டது