பக்கம்:பொன் விலங்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 95

அழகாயிருப்பவர்களுக்குச் சித்தமும் அழகாயிருப்பதைப் புரிந்துகொண்டால் எத்தனை பூரிப்பு அடைய முடியுமோ அத்தனை பூரிப்பைச் சத்தியமூர்த்தியும் அப்போது அடைந்தான். 'சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை என்ற மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஞாபகத்தின் மெல்லிய சாயலாக மனத்தில் தோன்றியது அவனுக்கு. உடம்பு மட்டுமல்லாமல் மனமும் அழகாக இருந்தாலொழிய இவ்வளவு அழகான வாக்கியத்துக்குச் சொற்கள் அவளுக்கு கிடைத்திருக்க முடியாதென்று சத்தியமூர்த்தி நினைத்தான். சித்தம் அழகியார் என்ற அர்த்த நிறைவுள்ள கவிச்சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவன் இதயத்தில் புரண்டு எதிரொலிக்கலாயிற்று.

தெருவில் காருக்குள் உட்கார்ந்த அந்த அம்மாளும் கண்ணாயிரமும் வெறுப்போடு தன் பக்கமாகப் பார்ப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி அந்தச் சந்திப்பை விரைவில் முடித்துக் கொள்ள எண்ணினான். அவர்கள் பார்வை -9] ରu ର୪) ବT வேதனைப்படுத்துவதாக இருந்தது.

"அவர்கள் உங்களை அவசரமாக எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. நீங்களானால் என்னோடு பேசிக்கொண்டு நின்றே நேரத்தைக் கழிக்கிறீர்கள்" என்று அவர்களைச் சுட்டிக் காட்டி அவளிடம் சொன்னான் சத்தியமூர்த்தி.

"இருக்கட்டும் பரவாயில்லை. அம்மாவுக்குத் தலைகால் பிடிபடாது. வாயெல்லாம் பல்லாகிவிடும். ஏதோ கூந்தல் தைலம் தயாரிக்கும் கம்பெனியாம். அதன்விளம்பரத்துக்காகநான் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு போட்டோவுக்கு உட்காரணுமாம்! எல்லாம் நான் பண்ணின பாவம் என் தலையெழுத்து.'

'போட்டோவை எடுத்தபின் அதற்குக் கீழே எங்கள் கூந்தல் தைலத்தை உபயோகித்ததனால் நாட்டிய நட்சத்திரம் மோகினியின் கூந்தல் செழித்திருப்பதைப் பாருங்கள்' என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இப்போதே நீங்கள் இப்படி நொந்து கொண்டால் என்ன செய்வது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/97&oldid=595993" இலிருந்து மீள்விக்கப்பட்டது