பக்கம்:பொன் விலங்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பொன் விலங்கு "அப்படிச் செய்தால் அவர்கள் மூஞ்சியில் காரித்துப்பிவிட்டு வருவேன். அம்மா கையால் வெறும் தேங்காயெண்ணெயைக் குழப்பித் தடவி வாரிவிட்டு வளர்ந்த தலை இது. 'மயில் தோகை மார்க் கூந்தல் தைலக்காரன் இதைக் காட்டிப் பெருமை கொண்டாடு வதற்கு ஒன்றுமே இல்லை."

"இப்படி ஒன்றைக் காட்டி மற்றொன்றுக்குப் பெருமை சேர்ப்பதுதான் விளம்பரம்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள்படியேறிப் போவதற்காகத்திரும்பினான்சத்தியமூர்த்தி, கண்ணாயிரமும் அவர் காரில் கொலு வீற்றிருக்கும் முதிய அம்மாளும் கணத்துக்குக் கணம் பொறுமை இழந்து கொண்டி ருப்பதைப் புரிந்துகொண்டே அவன் தன் உரையாடலை அவ்வளவு அவசரமாக முடித்துக் கொண்டு உள்ளே போக முந்தினான். அந்தப் பெண்ணோ போய்க்காரில் ஏறிக்கொள்ளவே மனமில்லாதவளாய்த் தயங்கித் தயங்கி ஏதோ இன்னும் சொல்ல வேண்டும் என்றோ, சொல்ல மீதமிருப்பதாகவோ நினைத்து நிற்பது என்று நின்றாள். நீங்கள் புறப்படுங்கள், நேரமாகிறது என்று நேருக்கு நேர் அவளிடம் சொல்லக் கூசியவனாக அதைச் சொல்வதற்குப் பதில் புலப்படுத்தும் நோக்குடனேயே வீட்டுக்குள் போவதற்குத் திரும்புகிறவனைப்போல் திரும்பியிருந்தான் சத்தியமூர்த்தி.

"என்னைஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள். வருகிறேன்" என்று சித்திரம்போல் அடக்கமாக நின்று தெருவில் அவள்கைகூப்பிய காட்சி மிகவும் அழகாயிருந்தது. தான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை எதுவோ அது தன் நினைப்பில் இல்லாமல் தன் நினைப்பிலிருக்கும் வாழ்க்கை எதுவோ அதைத்தான் வாழ முடியாமல் வேதனைப்படுகிற அந்த அபலைப் பெண் விடைபெறுகிற போது இன்னதென்று உறுதியிட்டுச் சொல்லமுடியாததோர் அவல உணர்வு சத்திய மூர்த்தியின் நெஞ்சைப் பிசைந்தது. நெஞ்சுக்கு நேரே சட்டையில் சொருகிக்கொள்வதற்காகப் பேனாவைக்கை மேலே உயர்த்தியபோது அதிலிருந்து ஒரு நறுமணம் அலையாகப் பரவி அவன் நாசியை நிறைத்தது. அந்தப் பெண் மோகினியைப் பற்றிய அநுதாப நினைவை நெஞ்சின் உள்ளேயும், அவள் காப்பாற்றிக் கொடுத்த பேனாவை நெஞ்சின் வெளியேயும் வைத்துக்கொண்டு வீட்டுப் படிகளில் ஏறி உள்ள சென்றான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சலில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடி மலைத்துப் போயிருந்தார். ஆண்டாள் கூடத்தை மெழுகிக் கொண்டிருந்தாள். அப்போது தந்தையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/98&oldid=595994" இலிருந்து மீள்விக்கப்பட்டது