பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 107. தாக இருக்கும்போதே வகுப்புக்கள் கலைவதற்கான நிறைவு மணி அடிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் மைதானத்தில் கூடத் தொடங்கியிருந்தனர். சுதர்சனன் சகஜமாகச் சிரித்துப் பேசியபடியே ஆசிரியர் கள் ஒய்வறையில் அமர்ந்திருந்தான். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் மன்றக்குடி மகபதி அடிகளாரின் இலக்கிய மன்றக் கூட்டத்திற்காகப் புறப்பட்டபோது சுதர்சனன் மட்டும் போகாமல் விலகி வீடு திரும்பிவிட்டான். அவர்களுடைய வேலை நீக்கத்திற்கான உத்தரவு பற்றி அவன் கவலைப்படவில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அவனுக்கு இல்லை. ஆனால் அவர்கள் அதைசி செய்த விதமும் அதற்காகக் காட்டிய காரணமும் அவனுக்குச் சரியாகப் படவில்ல்ை. nரியஸ் மிஸ் -காண்டக்ட்-என்று தன்னை நீக்குவதற்காக அவர்கள். போட்டிருந்த காரணம் அவனுக்கு எரிச்சலூட்டியது. தான் செய்யாத குற்றத்தை அவர்கள் தன்மேல் சுமத்தி அனுப்பப் பார்ப்பதை அவன் சகித்துக் கொள்ளத் தயாராயில்லை. நம்பிக்கையான வக்கீல் ஒருவரைக் கலந்து பேசினான். ஆனால் அவருக்குக் கல்வி இலாகா விதிகள் தெரிந்திருக்க வில்லை. ஆதர்சபுரத்திலேயே இருந்த வேறு ஒரு தொண்டு கிழமான ரிடயர்டு எல். டி. ஹெட்மாஸ்டரை வக்கிலும், சிதர்சனனுமாகப் போய்ப் பார்த்தார்கள். அவரிடமிருந்து கல்வி இலாகா விதிகள் விவரமாகத் தெரிந்தன. அந்த விதி களின்படி சுதர்ச்னன் எந்தத் தவறான காரியத்தையும் செய் திருக்கவில்லை என்று தெரியவே வக்கீல் பள்ளி நிர்வாகிக்கும் தலைமையாசிரியருக்கும் நோட்டிஸ் அனுப்பலாம் என்றார். அதைச் சொல்லிவிட்டு, "இதெல்லாம் பண்ணனுமா, அவசியமாங்கிறதை நீங்க ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா யோசியுங்க. உங்களாலே இந்தப் பணக்காரங் களையும் திமிங்கலங்களையும் எதிர்த்து நிற்க முடியும்னா இந்த வம்புலே இறங்குங்க. இல்லாட்டி மூச்சுவிடாமே வேறே எங்கேயாவது வேலை பார்த்துக்கிட்டுப் புறப்பட்டுப்