பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1.2 பொய்ம் முகங்கள் மிஸ் காண்டக்ட்டினாலே என்னை இந்த ஸ்கூலை விட்டுத் துரத்தறதாச் சொல்றாங்க. அதைத்தான் நான் ஆட்சேபிக் .கிறேன். காண்டக்ட்’னாலே என்னன்னு தெரியாதவங்க தான் என்மேலே இந்தக் குற்றத்தைச் சுமத்தறாங்க."

  • அதைத்தான் நீங்க இங்கே வந்ததிலேருந்து திரும்பத் திரும்பச் சொல்றேளே! எனக்குப்புரியாம இல்லே-நன்னாப் புரியறது, மலரெழில்ன் மனசு வச்சார்னா எல்லாத்தையும் கமுக்கமா செட்ரைட் பண்ணிடுவார். அவரை இப்பவே இங்கே வரச் சொல்லட்டும்ா? மூணாவது வீட்டிலேதான் குடியிருக்கார்.'" -

'நீங்க சொல்றதே எனக்கொண்ணும் புரியலே. ஆனா நான் யாரிட்டவும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க விரும்பலே. ’’ - - 'நீங்க ஒண்னும் பண்ணிக்க வேண்டாம். எல்லாம். தானே சரியாகும். மலரெழிலன்தான் எஜுகேஷன் டிபார்ட் மெண்ட்லே ஆல் இன் ஆல்! இதோ தானே அவரைக் கூப்பிட்டனுப்பறேனே?' - வக்கீல் ராமாநுஜாச்சாரி உடனே யாரிடமோ சொல்லி அனுப்பினார். பரமபக்தரான வக்கீல் ராமாநுஜாச்சாரிக் கும் பகுத்தறிவுவாதியான வட்டச்செயலாளர் மணவை. மலரெழிலனுக்கும் எப்படி எதனால் நட்பு இருக்கமுடியும் என்பதைச் சுதர்சனனால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. கொள்கைகளுக்கும் நட்புக்கும் தொடர்புவைத்து விருப்பு வெறுப்புக் காட்டாத நாகரிக நட்பாகவும் அது தெரியவில்லை. பக்தியின் பெயராலும் பரமார்த்திக் நிலை .களின் பெயராலும் உருவான ப்ழ்ைய வர்க்கங்களும், பேதங் களும் மறைவதற்குப் பதிலாகப் போலியான-கொள்கை பல மில்லாத ஓர் அசட்டுப் பகுத்தறிவு மாயையினால் புதிய வர்க்க பேதங்கள் கிளைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. புதிய பேதங்களிலும் பண ஆதிக்கமும் செல்வாக்கு ஆதிக்கமுமே பின்னணியாக நின்றன. பத்து திமிஷ்த்தில் மணவை மலரெழிலன் வந்து சேர்ந்தார்.