பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 . . பொய்ம் முகங்கள் பொறுப்புக்கு வந்து வாரிசுகளாக நிர்வாகம் செய்யத் தொடங்கிய போது லஞ்சம், ஊழல், கரண்டல் எல்லாமே. முன்னெப்போதும் இல்லாத வகையில் தாண்டவமாடத் தொடங்கியதனாலே அவர்கள் மெய்யான சுயமரியாதை வாதிகள் இல்லை என்று அவன் உணரத் தொடங்கினான். மணவை மலரெழிலனைச் சந்தித்தபோது மறுபடி இந்தப் பழைய விஷயங்கள் எல்லாம் சுதர்சனனுக்கு இன்று நினைவு வரத் தொடங்கின. ஒப்பில்லாத சமுதாயம்-உலகத்துக் கொரு புதுமை’- என்று பாரதி பாடிய புதுமைச் சமுதாயம்-பொதுமைச் சமுதாயம் வரவேண்டும் என்று. ஆசைப்பட்டான் சுதர்சனன். ஆதர்சபுரம் வந்திருந்த மன்றக்குடி மகபதி அடிகளார் அன்றிரவு எப்படியும் தன்னைக் கண்டு பேச முயல்வார் என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. பள்ளியிலிருந்து தான் விலக்கப்பட்டுவிட்ட செய்தியை நிர்வாகிகள்ோ, தலைமை: ஆசிரியரோ அடிகளாரிடம் சொல்லியிருப்ப்ார்களா அல்லது பூசி மெழுகியிருப்பார்களா என்பதை அவன்ால் இன்னும் அநுமானம் செய்ய முடியாமல் இருந்தது. தான் விலக்கப் பட்டுவிட்ட்தை அவரிடம் சொன்னால் அவரே அந்தப் பிரச்னையில் தலையிட்டு ஏதாவது சிபாரிசுக்கு வரக்கூடும் என்ற பயத்தில் அல்லது முன்னெச்சரிக்கையில் அவர்கள் அதை அவரிடம் கூறியிருக்க மாட்டார்கள் என்றுதான் முடி வில் தோன்றியது. அதுதான் சத்தியம் என்றும் தோன் றியது. இலக்கிய மன்றத்தில் பேச அடிகளார் வந்தபோது பள்ளியில் என்னென்ன நடந்திருக்கக்கூடும் என்று சிந்தித் தான் அவன். தலைமையாசிரியர் தம்முடைய வழக்கப்படி பூர்ணகும்ப மரியாதையோடும் மேளதாளத்தோடும் அடி களாரைப் பள்ளிக்குள் வரவேற்றிருப்பார். மாணவர்கள் முன்னிலையில் அடிகளார் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தமிழ் மொழியின் தனிச்சிறப்பு. திருக்குறளின் உயர்வு எல்லாவற்றையும் பற்றி முழங்கி யிருப்பார். கூட்ட முடிவில் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியாபிள்ளை - அடிகளாரை ச் சந்தித்து: