பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 3 தேடி வந்திருந்த அடிகளாரின் கார் டிரைவர் சிரித்த படியே சுதர்சனனை நோக்கிக் கூறலானான் : இப்போ நீங்க வர் ரீங்களா இல்லாட்டிச் சாமியே இங்கே உங்களைத் தேடிக்கிட்டு வரட்டுமான்னு கேட்டிச்சு. என்ன சொல்றீங்க?' என்று அதே காரில் வந்திருந்த அடி, களாரின் காரியஸ்தன் கேட்டபோது சுதர்சனனுக்கு உடனே என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. தான் போகாம விருந்துவிட்டால் சொன்னபடியே அவர் வந்தாலும் வந்து விடுவார் என்பது நிச்சயம், அந்த அகால வேளையில் அக்கம்பக்கத்தார் வந்து நெருங்கிக் கூட்டம் போடும்படி தன் வீட்டுக்கு அவரை வரவிடுவது அநாவசியம் என்று அவனுக்குத் தோன்றியது. ஒன்று ஆதர்சபுரம் ஜமீன்தார். உயர்நிலைப் பள்ளியிவிருந்து தன்னை நீக்கிவிட்டவிவரம் தெரிந்து அடிகள் கூப்பிட்டனுப்பியிருக்க வேண்டும். அல்லது தான் அன்று பள்ளிக்குப் போயிருந்தும் அவருடைய இலக் கிய மன்றப் பேச்சுக்குத் தங்கி இராமல் வீட்டுக்குத் திரும்பி புறப்பட்டுப் போய்விட்டதை உணர்ந்து அது பற்றிக் கேட் பதற்குக் கூப்பிட்டனுப்பியிருக்க வேண்டும் என்று தோன்றி. யது. தயக்கத்தோடு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றான் அவன். அருள்நெறி ஆனந்தர் மூர்த்தியின் வீட்டில் அடிகளார் தங்கியிருந்ததால் வேண்டா வெறுப்பாக அந்த மாளிகைக்குள் சுதர்சனன் நுழைய வேண்டியிருந்தது. தன்னைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக். குகிற அடிகளார் மேல் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது, அந்தக் கோபத்தை யார் மேலும் வெளிப்படை -யாகக் காட்டவும் முடியவில்லை, . . . "வாங்க சார்! அடிகளார் மாடியிலே இருக்காரு. போய்ப் பாருங்க. ரொம்ப நேரமா உங்களைப் பற்றித் தான் விசாரிச்சுக்கிட்டிருக்காரு' என்று எந்த விரோதமும் இல்லாத ஒருவர் வரவேற்பதுபோல் அவனை அங்கே