120 பொய்ம் முகங்கள் வரவேற்றார் ஆனந்தமூர்த்தி, பணக்காரர்களின் நாகுக்கும் வளைந்து கொடுக்கும் ரப்பர்த் தன்மையும் அவர்களுக்கு. எப்படி எப்படி எல்லாம் பிறரை ஏமாற்றுவதற்கும் பயன்படுகின்றன என்பதைச் சுதர்சனனால் அப்போது, நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. "ரொம்பப் பெரிய புரட்சியவாதியா ஆயிட்டீங்க போலிருக்கு! இனிமே என்னையெல்லாம் பார்க்கத் தோணாதுதான். என் பேச்சு எல்லாம் பிடிக்காதுதான்' என ஆதங்கத்தோடுத்ான் அவனை வரவேற்றார் மகபதி, அடிகள். - - - "எதைச் சொல்றீங்க? ஸ்கூல் ஃபங்ஷ்னைச் சொல் lங். களா? நான் எப்பிடி அதுக்கு வர முடியும்? இன்னிக்குப் பிற்பகல்லேருந்து நான் ஆதர்சபுரம் ஸ்கூல்லே வேலை பார்க்கலிங்களே; என்னை டிஸ்மிஸ் பண்ணினப்புறம் நான் எப்பிடி அங்கே வரமுடியும்?-' சொல்லிவிட்டுச் சுதர்சனன் அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். சுதர்சனன் இப்படி மறுமொழி கூறியதும் அடிகளார் பரக்கப் பரக்க. விழித்தார். அவன் சொன்ன விவரத்தை அவர் அதற்குமுன் அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது. ஜமீன்தாரும், தலைமையாசிரியரும், ஆனந்தமூர்த்தியும் தனது வேலை நீக்கத்தைப் பற்றித் தந்திரமாக அவரிடம் சொல்லாமல் மறைத்திருந்தார்கள் என்றும் சு த ர் ச ன னு க் கு த், தோன்றியது. - - . . . . - 'அடப்பாவமே! இதை என்னிடம் யாருமே சொல்: லலியே? நான் திரும்பத் திரும்ப விசாரிச்சப்போவாவது அலங்க இதைச் சொல்வியிருக்க வேணாமோ?!' . . . "சொல்லியிருக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். வீணா நான் உங்களைப் பார்க்கிறது மூலம் நீங்க மறுபடி என்னை வேலைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லி அவர் களை வற்புறுத்துவீங்களோங்கிற-பயத்தையும் தர்ம சங்கடத்தையும் அவங்களுக்கு உண்டாக்கக் கூடாதுன்னு: தான் நானும் உங்க முன்னாலே தட்டுப்படலே?'
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/122
Appearance