பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩48 - பொய்ம் முகங்கள் சுதர்சனனுக்குத் திகைப்பாயிருந்தது. கல்வியும்-உயர் தரஞானமும்கூடத் தரகுப் பொருள்கள் ஆக்கப்பட் டிருப்பது வேதனையை அளித்தது. மன வளர்ச்சி-பக்குவம் -பண்பாடு எல்லாவற்றையும் அளிக்க வேண்டிய கல்வித். துறை வெறும் மார்க்-மார்க்கெட் ஆகியிருப்பது தெரிந்தது. கல்வியைப் பற்றிய எல்லா ஏற்பாடுகளுடனும் யாரும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யாமலே வஞ்சமும் ஊழலும் திருட்டும் பொய்யும் சூதுவாதும் ஜாதியும் களை யாக முளைத்துப் பயிரே மறையுமளவு மறைத்துக்கொண்டு மண்டியிருப்பது தெளிவாக எதிரே தெரிந்தது. - "என்ன பெரிசா யோசனையிலே மூழ்கிட்டீங்க? உங்க ஃப்ரண்ட்ஸ் யாராச்சும் பி.எச்.டிக்கு தீவிஸ் சப்மிட் பண்ற வங்க இருக்காங்களா? இருந்தாச் சொல்லுங்க. அவங்க சிரமப் படவே வேணாம். ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிற தலைப்பை மட்டும் நம்பகிட்டச் சொன்னாப் போதும்...' 'நீங்க சொல்றது ஒண்னும் புரியவீங்களே...' "நான் என்ன ஃப்ரஞ்சிலியோ ஜெர்மன்வியோவா பேசறேன்? நல்லாப் புரியும்படியாத் தமிழ்லதானே சொல்லிக்கிட்டிருக்கேன்? உங்களுக்கு ஒரு சிரமமும் வைக்காமே தீவிளிை'த் தானே நீட்டா எழுதி ஆறு காப்பி" டைப் பண்ணிக் கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. தமிழ் தீவிஸ்னா ரெண்டாயிரம். ரூபாய். இங்கிலீஷ் தீளிஸ்னா மூவாயிரம் ரூபாய். நீங்க விரலைக்கூட அசைக்க வேணாம். பி.எச்.டி. உங்களைத் தேடித் தானா வந்து சேரும்...கொஞ்சம் தாராளமாச் செலவழிக்க மட்டும் தயாராயிருக்கணும்.' இது மாதிரிக்கூட ஒரு லெண்டிங் சர்விஸ் இருக்குங். ser fr?** * . பாதி இயல்பாகவும் பாதிக் குத்தலாகவும் தான் அவரை இப் படிக் கேட்டிருந்தான் சுதர்சனன்.