பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசார்தி 1 49 "இருக்காவது ஒண்ணாவது இருக்கும்படியா இந்தச் சிண்டிகேட் சிதம்பரநாதன் ஏற்பாடு பண்ணி வச்சிருக் கான் னு நெனைச்சுப் பெருமைப்படுங்க! டாக்டர் நாகேசு வரனார், டாக்டர் இருதயசாமீன் னு இப்பப் பேருக்கு முன்னே ஜம்னு டாக்டர்ப் பட்டம் போட்டுக்கிறவங்கள் ளாம் யார் தயவுலே அதை வாங்கினாங்கன்னு அவுங் களையே போய்க் கேட்டுப் பாருங்க. அப்பத்தான் தெரியும் நம்ப பெருமை...' - - டிக்கடையிலிருந்து பையன் வாங்கிக் கொண்டு வந்து வைத்த தேநீரைக் குடிக்கக் கூட நேரமின்றிப் பேசிக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சிதம்பரநாதன். டீயை முதல்லே குடியுங்க. ஆறிடப் போவுது' என்று அவருக்கு நினைவூட்டினான் சுதர்சனன். - அவர் தேநீரை எடுத்துப் பருகினார். சுதர்சனனும் பருகினான். தேநீர் குடித்து முடித்ததும் ஏதோ மறுபடி நினைத்துக் கொண்டவர்போல், "ஆமாம்! உங்க பேரென்ன சொன்னிங்க? மறந்து போச்சே...?' என்று இரண்டாவது தடவையாகவும் அவனைக் கேட்டார் சிதம்பரநாதன். - "சுதர்சனம்' "சுதர்சனம்னா?...' டி. ஆர். சுதர்சனம்' "அதாவது-வந்து.' -எல்லாப் படித்தவர்களையும்போல் த ன து: சாதியைப் பற்றி விசாரிக்கும் ஆசையில் சிதம்பரநாதன் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதிகளை ஒழித்துவிட விரும்பும் இந்த நவீன காலத்தில் தான் ஒவ்வொரு படித்த மனிதனுக்கும் அடுத்தவ லுடைய சாதியை அறிந்துகொள்ள விரும்பும் முனைப்பு பொ-10 - -