பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 167 "நல்லாச் செய்யலாம். ஆனால் ஒரு கண்டிஷன். இந்த டுட்டோரியல் காலேஜிலே உனக்குக் கீழே வேலை பார்க்க வந்திருக்கேன் என்கிறதை வச்சு உன் கட்சி. தலைவர், மாநாடு இதை எல்லாம் நீ என்னோடும் சப்பந்தப்படுத்தக் கூடாது ரகு. அங்கே மாலை போட வா. இங்கே பேச வான்னெல்லாம் தொந்தரவு செய்யக் கூடாது. அதில் நான் என்னுடைய தனித்தன்மையை ஒருபோதும் இழக்க மாட்டேன் என்பதை இப்போதே உனக்கு சொல்லிவிடு கிறேன்,' - - - 'அதுதான் நீ வந்ததிலிருந்து நீ எப்படி நடந்துகொண். டாய் என்பதைப் பார்த்து நானே புரிந்து கொண்டு. விட்டேனே? இன்னும் அதை நீ சொல்லித்தானா தெரிய :வேண்டும்?"

  • எப்பவும் வெளிப்படையாகச் சொல்லிடறதுதான் நல்லதுப்பா! நீ என்னடான்னா உன்னோட படிப்பு: நீ நடத்தற காலேஜ் முதலிய சகலத்தையும் நீ தலைவர்னு நினைக்கிற யாரோ ஒருத்தருக்குச் சமர்ப்பணம் பண்ணிப் போட்டமாதிரிப் பேசுறே? நான் அதுக்கெல்லாம் ஆளில் லேப்பா. முதல்லேயே அதைச் சொல்லிடணும்கிறத்துக்

காகத்தான் இதைப் பேசறேன்.' "உன் இஷ்டம் எப்படியோ அப்பிடி நீ நடந்துக்கலாம். தலைவரோட பழக்கம் உன்னை வளர்க்குமே ஒழிய, அழித்து விடாது. உன் நன்மைக்காகத்தான் நான் உன்னை அவருக்கு மாலை போடச் சொன்னேனே ஒழிய என் நன்மைக்காக அல்ல. வேண்டாம்னா விட்டுடேன்! அதிலென்ன வந்தது?" - - 'ஏத்துக்கிட்டாத்தானே அப்பா விட்டுடறதைப் பத்தின பிரச்னை. நான்தான் அதை ஏத்துக்கவே இல்லியே' - . . . . . - * . மறுநாள் காலையே சுதர்சனனுக்கு முறையாக ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை டைப் செய்து கையில்