பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 (? பொய்ம் முகங்கள் "உனக்கு மரியாதை என்னடா கேடு? அயோக்கியப் பயலே’ என்று கூப்பாடு போட்டபடியே 'கன்னியின் முத்தத்தை எடுத்து இளவழகனின் முகத்தில் வீசினார் பலராம் நாயுடு, , , . " - அதன் பிறகு சண்டை முற்றி அடிதடி ஆகாமல் தலைமையாசிரியர் புண்ணியத்தில் இளவழகன் தப்பினார். "nரியஸ் மிஸ் காண்டக்ட் என்று காரணம் காட்டி அப்பாவி இளவழகன் மறுநாளே தமிழாசிரியர் வேலையி: லிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அன்றிரவே தமிழா சிரியர் இளவழகன் வீட்டு வாசலில் அவர் வெளியே வரும் போது பலராம் நாயுடுவின் அடி ஆட்கள் சட்டி நிறைய மலஜல்த்தை நிரப்பி இளவழகனின் தலையில் உடைத் தனர். இருளில் தெருவில் இழுத்துப் போட்டு அடித்தனர். இரவோடு இரவாக விடியுமுன் அங்கிருந்து அதிகாலை நாலுமணி பஸ்ஸில் இளவழகன் வெளியேறித் தப்ப வேண்டியிருந்தது. - இதுதான் ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூலில் முந்திய தமிழாசிரியரின் கதை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கவிதை எழுதுகிற தமிழாசிரியர் என்றாலே ஆதர்ச புரத்தில் ஒரு மாதிரிப் பார்ப்பது வழக்கமாகி இருந்தது. சுதர்சனன் கவிதை எழுதுவதை இண்டர்வ்யூவின்போது சொல்லியிருந்தால் அவனுக்கு அங்கு வேலையே கிடைத் திருக்காது. நல்லவேளையாக அதை அவன் இண்டர்வியூ வில் சொல்லவில்லை. சொல்லக் கூடாது' என்றே அவனை அப்பள்ளிக்குச் சிபாரிசு செய்தவர்கள் முன்கூட்டி எச்சரித் திருந்தார்கள். -- * ஆனால் சில மாதங்களுக்குப்பின் இப்போது அவன் கவிதை எழுதுகிற தமிழாசிரியன் என்பது ஜாடைமாடை யாகவும், நேராகவும், தலைமையாசிரியருக்குத் தெரிந்து விட்டபின் அவனை அவர் கண்காணிப்பது அதிகமாயிருந்: தது. அவன் சம்பந்தமாக நிறைய முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும்.