பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 31 மாணவர்களிலேயே அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை அறிய சி.ஐ.டி.க்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவனுக்கு வருகிற தபால்கள்,புக் போஸ்டுகள் தலைமையா சிரியரால் சென்ஸார் செய்யப்பட்டன. இந்த விஷயங்கள் - சுதர்சனனைக் குமுறச் செய்வதற்குப் போதுமானவையாக இருந்தன. - 3 வாழ்க்கை முறைப்பட வேண்டும். அநாவசியமான வெறிகள் தணிய வேண்டும் என்றுதான் அவன் ஆசிரியர் தொழிலுக்கு வந்தான். தமிழ்க்கல்லூரியில் படித்தபோது இருந்த சுதர்சனன் வேறு. இப்போதுள்ள சுதர்சனன் வேறு: என்று பிரித்து நினைக்கவும், பேசவும் ஏற்றபடி அவன் அவ்வளவு தூரம் மாறியிருந்தான். - அவன் தமிழ்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இந்தி அழிப்புப் போர், பிள்ளையார் சிலை உடைப்புப் போர் எல்லாமே நடந்தன. கல்லூரியில் "வெட்டிக் கொண்டுவா, என்றால் கட்டிக்கொண்டு வருகிற. சாமர்த்தியமுள்ள மணி மணியான மாணவர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்கள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்: தார்கள். தமிழைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழல்லாததை எல்லாம் அழித்து விடவேண்டும் என்ற முரட்டு வெறியும். பகுத்தறிவு வளர வேண்டுமானால் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டும் என்ற முரண்டும் அவனை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்த காலம் அது, - - நாம் ஆதரிக்கும் எண்ணத்தை வளர்க்க வேண்டும். என்பதைவிட நாம் எதிர்க்கும் எண்ணங்களுக்குரியவர்களை அழித்துவிடவேண்டும் என்ற எதிர்மறைப் பார்வையே. வளர்ந்திருந்தது. பின்பு புலவர் வகுப்பு இறுதி ஆண்டில்