உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பொய்ம் முகங்கள் அந்தக் கல்லூரியில் அவர்களோடு சேர்ந்து படித்த ஒரு மார்க்சிஸ்டு சுதர்சனனின் இந்தப் பார்வையை மெல்ல மாற்றி உலகளாவிய தத்துவ நோக்காக உருவாக்கினார், .உழைக்கும் கூட்டம், உழைக்காத கூட்டம், உடமைக்குப் போட்டி போடும் சோம்பேறிகள், உழைத்து வாழும் தொழிலாளிகள் என்று பார்வையை பெரியதாக்கினார் அந்த நண்பர். - அவன் அதற்கு முன்பு சார்ந்திருந்த இயக்கம் பெரிய நிலப்பிரபுக்களும், பணக்காரர்களும், பல்ழய ஜஸ்டிஸ்கட்சி ஆட்களும் நிரம்பியதாக இருக்கவே புதியமனப்பான்மையின் காரணமாக அதன் மேலுள்ள பிடிப்பு மெல்ல மெல்ல விடுபட்டு வெறுப்பாக மாறியது. தலைமையாசிரியர் வாசு தேவன் மேல் இன்றும் இதற்கு முன்பும் அவனுள் ஏற்பட் .டிருந்த வெறுப்பு சாதி அடிப்படையில் அல்ல. ஆதர்ச புரத்தில், நிலப்பிரபுக்கள் எல்லாச் சாதிகளிலும் இருந் தார்கள். ஏழைகள், உழைப்பவர்கள், தொழிலாளிகளும் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள். . . . அந்த ஆண்டின் பள்ளி நூல் நிலையத்திற்குப் புத்தகங் கள் வாங்குவதற்குப் பட்டியல் தயாரித்தபோதே தலைமை யாசிரியருக்கும் அவனுக்கும் ஒரு சிறிய தகராறு மூண்டி ருந்தது. சொல்லப்போனால் தல்ைமைத் தமிழாசிரிய ராகிய பிச்சாண்டியர் பிள்ளைதான் நூல்களின் பட்டி யலைத் தயாரித்திருக்க வேண்டும். அவர் பழையகாலத் தமிழ்ப் பண்டிதர், தற்கால நூல்கள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாதவர். சிவஞான முனிவரின் இராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி’க்குப் பிறகு வந்த வெளியீடுகளைப் பற்றி அவருக்குத் தெரியாது. ஆகவே அவராகவே நூல்களின் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பைச் சுதர்சனனிடம் விட்டார். நூற்றைம்பது புத்தகங்களில் சுதர்சனன் வாழ்க்கை வரலாறு' என்ற பிரிவில் காந்தி, நேரு, சுபாஷ் போஸ் போன்றவர்களோடு கார்ல்மார்க்ஸ், வீரர் வி. ஐ. லெனின், என்ற இரு புத்தகங்களைச் சேர்த்திருந்தான். தலைமையாசிரியருக்குக் கோபம்