நா. பார்த்தசாரதி as மூண்டுவிட்டது. 'கண்ட புஸ்தகங்களை எல்லாம் சேர்த். துப் பையன்களைக் கெடுக்கப் பார்க்கிறீரே...' எதைச் சொல்றீங்க?" தமக்குப் பிடிக்காத அந்த இரு புத்தகங்களைச் சுட்டிக் - காட்டினார் தலைமையாசிரியர் வாசுதேவன். - - அவன் வாதாடிப் பார்த்தான். - நான் உம்மகிட்டே இதையெல்லாம் பத்திப் பாடம்: படிச்சுக்க வரலே'-என்று சொல்லிப் புத்தகப் பட்டியலில் தமக்குப் பிடிக்காத பெயர்களை அடித்துவிட்டார் தலைமையாசிரியர். - - - சுதர்சனன்மேல் அவருடைய கண்காணிப்பும் பயமும் வளர இவை எல்லாமே காரணங்களாக அமைந்து விட்டன." நிர்வாகத் தரப்பிலும் அவன்மேல் சந்தேகப்பட வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் சம்பவங்கள் சில தற்செய லாகவே நடந்து விட்டன. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் சராசரி இந்திய அறிவாளிகளுக்கு எங்கும் எதனாலும் பாதிப்பு ஏற்படாது. கதர்சனன் உள்ளொன்று. வைத்து புறமொன்று பேசும் கல்ையில் ஒரு சிறிது அளவு கூடத் தேர்ச்சி பெறவில்லை. அதை விரும்பவும் இல்லை. ஆதர்சபுரத்தில் ராமப்ஜனை சமாஜம், திருக்குறள் மன்றம், சைவசமய மன்றம் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவன் அந்த ஊரில் வேலைக்கு வந்து சேர்ந்த புதிதில் திருக் குறள் மன்றத்தின் பதினாறாவது ஆண்டு நிறைவு விழாவோ என்னவோ வந்தது. புதுத் தமிழாசிரியர் என்ற". முறையில் அவனையும் சொற்பொழிவு ஆற்றுவதற்கு, அழைத்திருந்தார்கள்: ஊரில் ஒவ்வோர் அமைப்பில் ஒரு விதமான ஆதிக்கமும் ஆட்சிக்கட்டுப்பாடும் இருந்தன. ராமபஜனை சமாஜத்தில் வக்கீல்களின் ஆதிக்கம் என்றால், சைவ சமய மன்றத்தில் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம். திருவள்ளுவர் மன்றமோ பக்கத்து மலைப்பகுதிகளில் உள்ள தேயிலை ஏலக்காய்.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/35
Appearance