பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 6.3 - உடனே மறுபடி அவனை இரைந்து கூப்பிட்டு, 'இந்தா" உன்னைத்தானே? அந்த சுதர்சனனுக்கு சர்வீஸ் ரிஜிஸ்தர்' ஒப்பன் பண்ணியாச்சா, இல்லையா?" என்றார் தலைமை யாசிரியர். - முன்னாலே எந்த ஸ்கூல்லேயாவது செர்விஸ்ல இருந்தா அங்கேருந்து இதுக்குள்ளே டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்காது சார். இல்லாட்டி சர்வீஸ் ரிஜிஸ்டரே இன்னும் ஒப்பன் பண்ணலியோ என்னவோ?’’ 'அப்ளிகேஷன், அப்பாயிண்மெண்ட் ஆர்டரை எல்லாம் ஃபைல்லேருந்து எடுத்துப் பார்த்தால் தானே. தெரியுது? ஒண்ணையுமே எடுத்துப் பார்க்காமே நீர் இப்பிடி மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்கிற மாதிரிப் பதில் சொன்னிா எப்படி? எல்லாத்தையும் பார்த்துட்டுப் பதில் சொல்லுமேன் ஐயா!' - - - சரி சார்! பார்க்கிறேன்." - அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஸ்கூல் காம்பவுண்டிற்குள் ஒரு புத்தம் புது அம்பாளிடர் கார் வந்து நின்றது. கட்டை குட்டையாக ஓர் இரட்டை நாடி சரீரமுள்ள முதியவர் காரிலிருந்து இறங்கினார். உடனே குமாஸ்தா அவசர அவசரமாகத் தலைமையாசிரியர்" முன்னால் ஓடிவந்து, கவுண்டரே வந்துட்டாருங்க' ... • வாங்க கவுண்டர் சார்! நீங்க ஸ்கூல் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு இல்லியா?' என்று முகம் மலர வரவேற்: நார். தலைமையாசிரியரின் நெற்றி சுருங்கி அதிலிருந்த நடு. நாமச்செந்நிறக் கீற்று அழகாக மடிந்தது. சுருங்கி விரிந்தது. அதான் இப்ப விர்ர மாதிரிப் பண்ணிட்டீங்களே: ஆமாம், இங்கே ஸ்கூல்லே பாடம் சொல்லிக் குடுக்கறதுக் காகத் தமிழ் வாத்தியாரை வேலைக்குப் போடlங்களா? அல்லது ஊர்ல. இருக்கிற சூனாமானாக் கல்யாணங்களுக் கெல்லாம் தலைமை தாங்கறதுக்காகப் போட்டிருக்கீங்: களா?' “. . ; .