பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பொய்ம் முகங்கள் "அவரு எங்களைக் கேட்காம ஒத்துக்கிட்டிருக்காரு. நீங்க ஜமீன்தாரோட ஃபிரண்டுன்னு நான் கூட அவர் கிட்டச் சொல்லியாச்சு. இப்போ உங்க ரிஜஸ்டர் லெட்டரும் கிடைச்சிது. அதை பேஸ் பண்ணித் தமிழ்ப் பண்டிட் கிட்ட எக்ஸ்பிளேனேஷன் கால்ஃபார் பண்ண லாம்னு இப்பத்தான் கிளார்க்கைக் கூப்பிட்டுச் சொல்லிக் கிட்டிருந்தேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந் மாதிரி நீங்களே வந்துட்டீங்க...' "எக்ஸ்பிளேனேஷன் என்ன ஐயா எக்ஸ்பிளேனேஷன்? இப்பவே கூப்பிடுங்க. என் கால்லே இருக்கிறதைக் கழட்டி அவனை நாலு போடு போடறேன். அப்பவாவது அவனுக்குப் புத்தி வருதா பார்க்கலாம்...' - - -

  • { - x - * கை

'யாரோ என் மகனை ஏமாத்திச் சொத்துக்கு ஆசைப் பட்டு பிளாக் மெயில் பண்ணிப் பத்திரிகை அடிச்சுக் கல்யாணம்னு போட்டான்னா அதுக்கு இவன் போய்த் தலைமை வகிக்கிறானாமில்லே, தலைமை?’’ 'கோபப்படாதீங்கோ சார்! உள்ள வந்து உட் காருங்கோ. நான் பார்த்துக்கறேன்.' 'போன வருசம் இந்த ஸ்கூல் லேபரேட்டரிக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதுக்கு முந்தின வருசம் லைப்ரரிக்கு ஐயாயிரம் அழுதேன். இந்த ஸ்கூல்லேருந்தே நமக்கு எதிரி புறப்படறான்னா அதை என்ன சொல்றது? ஜமீன்தாரும் நானும் அண்ணன் தம்பி மாதிரிப் பழகறோம். நம்பகிட்டவே வாலாட்டறானுவளே? அவ்ன் யாருன்னு ஒரு கை பார்த்துடறேன்: வரச்சொல்லுங்க." தலைமையாசிரியருக்குச் சுதர்சனன் மேல் கவுண்டர் கோபப்பட்டுச் சீறுவதைப் பார்த்து உள்ளுற மகிழ்ச்சியா '.யிருந்தாலும் அவர் தன் முன்னிலையில் அப்படிக் காட்டுத் தனமாகக் சுத்திக் கூப்பாடு போடுவதை இரசிக்க முடியாமல் இருந்தது. தொலைவில் இருந்து கவுண்டர் கத்துவதைக்