பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*32 பொழுது புலர்ந்தது

அப்படியால்ை சட்டமறுப்புச் செய்வதாகச் சொன் னதுவே காரணமாயிருக்க வேண்டும். ஆனல் ஒருவன் சட்ட மறுப்புச் செய்வேன் என்றவுடன் அவனைக் கைதி செய்து விடலாமா? அப்படிச் சொன்னவன் செய்யாமல் இருந்து விடவும் செய்யலாம் அல்லவா? இதோ செய்யப் போகிறேன் என்று செய்ய ஆரம்பித்தால்தானே கைதி செய்யலாம்?

காங்கிரஸ் கமிட்டியார் என்ன சொன்னர்கள்? அவர் கள் போர் ஆரம்பமானதுமுதல் சர்க்காருக்கு இடைஞ் சல் விளைவிக்கக் கூடாது என்றே கடந்து வந்திருக் கிருேம், அதேைலயே காந்தியடிகள் கூறிய மாதிரியில் சத்தியாக்ரகம் செய்தால் பிரயோஜனப் படாது என்று தெரிந்திருந்தும் அந்த மாதிரியிலேயே செய்தோம், ஆனலும் எங்கள் எண்ணத்தை மதித்து அதிகாரத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம், இப்பொழுதும் எங்களுக்கு இடைஞ்சல் செய்ய விருப்பமில்லை, நேச தேசங்களுக்கு உதவி செய்யவே விரும்புகிருேம், ஆனல் சர்க்கார் எங்கள் வேண்டுகோளே கிராகரித்து விட்டால் நாங்கள் சும்மா இருக்க முடியாது, சும்மா யிருந்தால் தேசத்தின் எதிர்ப்புச் சக்தி குறைந்து போகும், அதனுல் அஹிம்ஸா சக்தியைக்கொண்டு சுதந்திரப் போர் நடத்த வேண்டியவர்களாவோம் என்றே கூறினர்கள்.

உடனே சட்டமறுப்பு ஆரம்பிப்போம் என்று கூற வில்லை. உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிருேம், நீங்கள் கிராகரித்து விட்டால் ஆரம்பிக்க வேண்டியவர்க வளாவோம் என்றே கூறினர்கள்.

அதனலேயே காந்தியடிகளும் ‘ தீர்மானம் கிறை வேறியவுடன் சட்டமறுப்பு ஆரம்பமாகிவிடாது. சட்ட மறுப்பு ஆரம்பிக்குமுன் நான் எப்பொழுதும் செய்வது போல வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதி நம்முடைய