பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

- - - - -

வங்காளப் பஞ்சம்

1943 அக்டோபர் 18-ந் தேதி வேவல் பிரபு வைஸ்ராய் பதவியை ஏற்று, அடுத்த வாரம் கல்கத்தா சென்று, பஞ்சத்தின் கொடுமையைத் தீர்க்க சேனேயின் உதவியை வங்காள சர்க்காருக்குக் கிடைக்கும்படி செய்தார். அதல்ை ஜனங்களுக்குச் சில செளகர்யங்கள் உண்டா யின. ஆயினும் பஞ்சம் கடந்து கொண்டேதான் இருந்தது.

வங்காளத்தில் ஏப்ரல் மாதம் அதிகமாகத் தொடங் கிய பஞ்சம் நவம்பர் மாதத்துக்குள் காவால் சொல்ல வேண்டாம், மனத்தால் கூட கினேக்க முடியாத அளவு அதிகப்பட்டுவிட்டது. தேசமெங்கும் ஜாதிமத வேறுபா டின்றி வங்காளத்துக்குப் பண உதவியும் வைத்திய வசதியும் அளிக்க ஏற்பாடுகள் எல்லோராலும் அவசர அவசரமாகச் செய்யப்பட்டன. 5500 இடங்களில் சமையல் செய்து 21 லட்சம் பேர்க்கு இலவசமாக உணவு அளிக்கப்பட்டது. ஆயினும் கல்கத்தாவிலுள்ள ஆஸ்பத் திரிகளில் தினந்தோறும் 60, 70, பேர் பட்டினியால் இறந்துபோய்க்கொண்டிருந்தார்கள். தெருக்களிலெல்லாம் பிணங்கள் குவியலாயின. அவற்றைச் சுட முனிவலி பாலிட்டியார் ஏற்பாடுகள் செய்தும் உடனுக்குடன் சுட முடியாமல் பிணங்கள் அடுக்கிக் கிடக்கும்படி அவ்வளவு அதிகமாக அநாதை மரணங்கள் உண்டாய் வந்தன. தாய் தந்தையர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்பொருட்டு