பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

வேவல் பிரசங்கம்

வேவல் துரை வந்தால் விமோசனம் வந்து விடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமே அடைந்தார்கள். அவர் 1944 பெப்ரவரி மாதம் நடைபெற்ற மத்தியசபைக் கூட்டத்தில் :

“யாரும் பூகோள அமைப்பை மாற்றிவிட முடியாது. தேசப் பாதுகாப்பு, அங்கிய நாட்டுச் சம்மந்தம், உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரப் பிரச்னே, எதைக் கவனித்தாலும் இந்தியா ஒரே தேசமே.”

என்று கூறியது பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் என்று கேட்டுப் புண்பட்டுப் போயிருந்த இந்தியத் தாயின் மனத் துக்கு அமிர்தாஞ்சனமாகவே இருந்தது. அப்படியால்ை வேவல்துரை ஜின்ன சாகிபிடம் தேசத்தைப் பிரிக்கமுடி யாது, உம்முடைய கடையைக் கட்டும் என்று கண்டிப் பாய்க் கூறிவிடுவார் என்ற எண்ணம் உதித்தது. அவரும் ஏகாதிபத்தியச் சக்கரங்களில் ஒருவரே என்பது மறந்து போய்விட்டது.

அதை மறக்கலாமா? என்று கேட்பதுபோல அவர் அடுத்த வாக்கியத்தில்

“ ஆனல் இரண்டு முக்கியக் கட்சிகளுமாவது ஒன்று சேர்ந்தாலன்றி சமீபத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்ற அறிகுறி தோன்றவில்லை.” # o

என்று கூறி நமக்கு ஏகாதிபத்தியத்தின் மூலமந்தி ரத்தை கினேவூட்டினர்.