பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திஜியின் திட்டம் 163

டும் என்று கேட்பதால் முஸ்லிம்களிடமும் ஒட்டு எடுக்க வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் ராஜ்யத்தைப் பிரிக்க வேண்டியதைத் தவிர வேறு வேலையில்லை.

(2) அப்படிப் பிரிக்கும்பொழுது வட மேற்கில் சிந்து, எல்லேப்புறம், பலுச்சிஸ்தானம், பஞ்சாப், வடகிழக்கில் வங்காளம், அஸ்ஸாம் இந்த ஆறு மாகாணங்களேயும் அப்படியே முஸ்லிம் ராஜ்யமாகப் பிரித்து விட வேண்டும். அப்படிப் பிரிப்பதும் பிரிட்டிஷ் சர்க்கார் உள்ள இப் பொழுதே நடைபெற வேண்டும். இடைக்கால சர்க்காரில் இந்துக்கள் மெஜாரிட்டியாய் இருப்பார்களாதலால் அந்த சர்க்கார் பிரித்தால் முஸ்லிம்களுக்குத் திருப்தி யுண் டாகாது. - -

(3) தேசத்தை இரண்டு ராஜ்யங்களாகப் பிரித்தபின் அவற்றின் இடையில் அன்னிய ராஜ்யங்களின் இடையி லுள்ள சம்பந்தமே இருக்கும். பொது விஷயங்களைப் பரிபாலிக்க என்று ஒரு மத்திய போர்டுக்குத் தேவை யில்லை. ஜின்ன திட்டத்துக்கு ஆகேஷபங்கள் 1. இரண்டு சமுதாயக் கொள்கை :

(1) லாகூர் தீர்மானத்தில் இந்தப் பேச்சே யில்லை. அது கூறுவதெல்லாம் முஸ்லிம் மெஜாரெட்டியான பிர தேசங்களே முஸ்லிம் ராஜ்யமாகப் பிரிக்க வேண்டும் என்பது ஒன்றே. அதை எப்படிப் பிரிக்க வேண்டும் ான்ற விஷயங் கூட அதில் சொல்லப்படவில்லை என்று காந்தியடிகள் எடுத்துக் காட்டினர்.

(2) ஒரு மகத்திலிருந்து மற்றாெரு மதத்துக்கு மாறிய வுடன் மதம் மாறியவர்கள் வேறு சமுதாயத்தாராக ஆகி விடுகிறார்கள் என்பது சரித்திரத்தில் எங்கும் காணுத விஷயம். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் 95 சதமான வர்கள் இந்துக்களாயிருந்து முஸ்லிம்களானவர்கள்.