பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமா 13.

எண்ணும் உறுதி மொழிகளைக் கூறுவதால் என்ன பயன்? “ என்று முன்னுல் இந்தியா மந்திரியாயிருந்த மாண்டேகு துரை கேட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

சரி, அது போகட்டும், பல கட்சியாரையும் கலந்து கொள்வார்களாமே, அந்தப் பல கட்சியார் யார்? அவர் களில் சர்க்காருக்குத் துணை நிற்பவர் சமஸ்தானதிபதி களும் பிரிட்டிஷ் வியாபாரிகளும் ஆவர். ‘ சமஸ்தானதி பதிகள் இந்தக் காலத்தில் இருக்க வேண்டாத இடைக் காலச் சின்னங்கள்-பிரிட்டிஷ் வியாபாரிகள் இந்திய நாட்டின் பரம விரோதிகள் ‘ என்று நேரு கூறினர். நம்முடைய தலை விதியை நிர்ணயிக்க இவர்களுக்கு உரிமை ஏது?

ஆகவே போர் முடிந்ததும் இந்தியாவுக்குக் கிடைப் பது இது என்று விளங்கவில்லை. அதற்கு ஒத்ததாக அதுவரை அமைக்கப்படுவது வெறும் ஆலோசனை சபை மட்டுமே. இதுவா காங்கிரஸ் மகா சபை கோரிய யுத்த லட்சிய விளக்கம்? ஆதலால் காந்தியடிகள்- வைஸிரா யின் அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதை வெளியிட்டதை விட வெளியிடாமலே இருந்திருக்கலாம்” -என்று கூறினர். அதில் சந்தேகம் என்ன ? பிரிட்டிஷ் சர்க்கார் இந்த யுத்தத்தை நடத்துவதின் உண்மையான நோக்கம் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றவே என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. சுதந்திரத்துக்கான போர்-ஜனநாயகத்துக்கான சண்டை என்பதெல்லாம் வெறும் ஜால வார்த்தைகளாய் விட்டன. தேசத்தின் சகல பாகங்களிலிருந்தும் கண்டனங்கள் வெளி வந்தன. காங்கிரஸ் காரியக்கமிட்டியார் வைஸி ராயின் அறிக்கையை நன்றாய்ப் பரிசீலனே செய்து

முற்றிலும் அதிருப்தி அளிப்பது. பழைய சாம்ராஜ் யக்கொள்கையையே கூறுவது. எங்களுக்குள் வித்யாசங்