பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பொழுது புலர்ந்தது

அரசாங்கத்தின் தலைவரானர். இந்தியாவுக்கு விஸ்வாஸப் பிரமாணம் செய்தார். இதர மந்திரிகள் நேதாஜிக்கும் இந்தியாவுக்கும் விஸ்வாஸப் பிரமாணம் செய்தார்கள்.

இந்த சர்க்கார் அமைந்து விட்டதைக் கேட்டதும் மலேயாவிலுள்ள இந்தியர்கள் தங்கள் சொத்துச் சுகங் களுக்கும் மானத்துக்கும் மரியாதைக்கும் இனிமேல் பங்கம் ஏற்படாதென்று எண்ணி சந்தோஷப்பட்டார்கள். இரண்டு லட்சத்து 30 ஆயிரம்பேர் அந்த சர்க்காருக்கு விஸ்வாஸப் பிரமாணம் எழுதிக் கொடுத்தார்கள். ஆஜாத் ஹிந்த் சர்க்கார்

கிழக்கு ஆசியாவிலிருந்த இந்தியர்கள் ஏராளமாகப் பணமும் நகையும் தானியமும் சொத்தும் ஆஜாத் சர்க் காருக்குக் காணிக்கையாக அளித்தார்கள். அவற்றைக் கொண்டு சர்க்கார் இராணுவத்தை நடத்தியதோடு மலேயாவிலிருந்த இந்திய மக்களுக்குக் கல்வி புகட்டவும் வைத்திய வசதிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்தார்கள். இந்த சர்க்கார் ஜப்பானிய சர்க்காருடன் சமஅந்தஸ்து உடையதாகவே இருந்து வந்தது. ஆம், உண்மையிலேயே அது ஆஜாத் சர்க்கார்தான். கிழக்கு ஆசிய காடுகளும் ஜெர்மனியும் இத்தாலியும் அந்த சர்க்காரை அங்கீகரித் தன. 1943 டிசம்பர் மாதத்தில் ஜப்பானிய சர்க்கார் தாங்கள் பிடித்திருந்த அந்தமான் தீவுகளையும் நீக்கோபர் தீவுகளையும் ஆஜாத் ஹிந்த் சர்க்காரிடம் ஒப்புவித் தாாகள. -

ஆஜாத் சர்க்கார் அமைத்தவுடன் நேதாஜி பிரிட்டன் மீதும் அமரிக்காமீதும் போர் தொடுக்கப் போவதாக யுத்தப் பிரகடனம் செய்தார். 1944 ஜனவரி 4-ம் தேதி யன்று ஆஜாத் சர்க்காருடைய தலைமை ஸ்தலத்தை சிங்கப் பூரிலிருந்து ரங்கூனுக்கு மாற்றிக்கொண்டு இந்தியா மீது படை எடுக்க உத்திரவிட்டார்.