பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பொழுது புலர்ந்தது

கள் இருக்கலாம், அவற்றை நீங்கள் கவனிக்க வேண்டிய தில்லை. சுதந்திரம் அளிக்கப் பிரியமா பிரியமில்லையா. அதை மட்டும் கூறுங்கள். பிரியமில்லையானல் எங்களால் உங்களோடு ஒத்துழைக்க முடியாது. அதற்கு முதற்படி யாக காங்கிரஸ் மந்திரிகள் தங்கள் பதவிகளே ராஜிநாமா செய்வார்கள்-என்று கூறினர்கள்.

இப்பொழுதும் காங்கிரஸ் கமிட்டியார் கடுமையான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல், அரசாங்கம் இன்னும் தர்மத்தை உணராதா என்று எதிர்பார்த்தார் கள். அதல்ை ஏழு மாகாணங்களிலும் காங்கிரஸ் மந்திரி களின் ராஜிநாமா மட்டும் நடை பெற்றது. உடனே சர்க்கார் கவர்னர்களுடைய எதேச்சாதிகார ஆட்சி நடை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்கள். காங்கிரஸ் மந்திரி சபைகள் போய் கவர்னர்களுடைய ஆட்சி ஏற்படவே, வைஸி ராய் 1939 நவம்பர் 11ம் தேதி காந்தியடிகளையும் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பாவுவை யும் ஜின்னுசாகேபையும் ஒன்று சேர்த்து ஆலோசிப்பதற் காக அழைத்தார். அப்படியே மூவரும் அவருடைய மாளிகைக்குச் சென்றார்கள். ஆலோசனையும் நடந்தது. ஆனல் அரசியல் வானத்தில் அணுவளவும் வெளிச்சம் உண்டாகவில்லை.

ஆயினும் வைஸி ராய் சர்க்காருடைய யோசனைகளே விளக்கி காங்கிரஸ் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதற்கு காங்கிரஸ் தலைவர் எழுதிய பதிலின் சாரம் வரு மாறு :

அரசாங்கத்தின் யுத்த லட்சியம் யாது? இந்தியா வுக்கு சுதந்திரம் அளிக்கச் சம்மதமா? அதைப்பற்றி ஒன்றுமே கூறக்காணுேம். அத்துடன் வகுப்புப் பிரச்னையை அனுவசியமாக இழுத்துக் குழப்புகிறீர்கள். அதற்கும் சுதந்திரப் பிரகடனத்துக்கும் யாதொரு சம்பந்த