பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பொழுது புலர்ந்தது

அப்படி யானுல் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவில் இருந்து கொண்டிருப்பது நாம் ஒருவரை யொருவர் கழுத் தைத் திருகாமல் பார்த்துக் கொள்வதற்காகத்தானே ? அந்த வேலையும் பார்த்துப் பார்த்து அவர்கள் அலுத்துப் போய் விட்டார்களோ? நமக்கு அணுவளவேனும் இரக்க மிருந்தால் அவர்கள் பாரத்தை இறக்கவிடாமல் தடை செய்துகொண்டிருக்கலாமா?

காங்கிரஸ் மகாசபை அதிகாரத்தை ஜனங்களிடம் தரும்படி கூறுகிறது. அரசாங்கமோ - எங்களுக்கு எதற்கு அதிகாரம் ? ஆல்ை உங்களுக்குள் ஒற்றுமை உண்டாகிவிட்டதா? - என்று கேட்கிறது.

இப்படித் திரும்பத் திரும்ப இதே பல்லவியைப் பாடு வதைக்கேட்டு, காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அலகா பாத்தில் கூடி ஆலோசித்து -

நீங்கள் கூறுவதைக் கேட்டால் கோபமே வருகிறது. நாங்களும் அஹிம்சாப் போர்க்குத் தயார்தான். ஆளுல் சத்யாக்ரகி அவசரப்படக் கூடாது. அதல்ை நீங்கள் எங்களேத் தள்ளிக் கதவைத் தாழிட்டாலும் நாங்கள் இனியும் சமாதானத்துக்கே முயல்வோம் - என்று சர்வ சாந்தமாகக் கூறினர்கள்.

ஆல்ை காங்கிரஸ் கமிட்டியார் இப்படி மறுபடியும் மறுபடியும் சமாதானமான ஒரு ஏற்பாட்டை அமைக்க அரும்பாடுபட கியாய முண்டோ ? அவர்கள் பிரிட்டிஷா ரின் யுத்த லட்சியம் யாது என்று கேட்ட கேள்விக்குப் பதில் கூற விரும்பியதுபோல நவம்பர்மாதம் 26-ம்தேதி பிரிட்டிஷ் பிரதம மந்திரி சேம்பர்லேன்,

“ எங்கள் யுத்தலட்சியம் எதிரியைத் தோல்வியுறச் செய்வது - எங்கள் சமாதான லட்சியம் புதியதோர் ஐரோப்பாவை அமைப்பது ‘ என்று ஸ்பஷ்டமாக ரேடியோவில் பிரசங்கித்தார்.