பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் போர்முறை - 269.

வேற்றினர்கள். அதன் சாரம் வருமாறு:

“ வங்காள சர்க்கார் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை நாள் என்று கூறியதால் 16ம் தேதிக் கொண்டாட்டத்தில் சேராதவர்களுக்குச் சர்க்கார் பாதுகாப்புக் கிடையாது. என்று எண்ணும்படியாக ஆகிவிட்டது.

சாதாரணமாக முகரம் முதலிய விழாக்காலங்களில் ஊர்வலத்துடன் போலீஸ்காரர்கள் செல்வது வழக்கம். ஆல்ை ஆகஸ்ட் 16ந்தேதி அப்படிச் செல்லவில்லை. அது மட்டுமன்று போலீஸாரிடம் உதவி கேட்டபொழுது அவர்கள் உதவி செய்யவுமில்லை. சில இடங்களில் போலிஸ் கூடக் கொள்ளேயிடுவதில் கலந்து கொண்டது. ஹிந்துக்கள் எழுந்த பின்னரே இராணுவமும் போலீஸும் அழைக்கப்பட்டன. ஆதலால் உடனே அங்கு நடந்த சம்பவங்களைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

வகுப்புப் பிரச்னையைப் பயமுறுத்தலாலும் பலாத் காரத்தாலும் தீர்க்க முடியாது. நட்பு முறையில் விவாதிப் பதாலும் அவசியப்பட்டால் மத்யஸ்தத்தாலுமே தீர்க்க முடியும்.’

ஆம், மத்யஸ்தத்தால் தான் தீர்க்க முடியும், அதற்கு காங்கிரஸ் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. அதைப் பல தடவை பகிரங்கமாகக் கூறியும் ஆய்விட்டது. அது கான் கியாயமான முறை என்பதை கிதானமாக ஆராய் கிறவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அப்படி யால்ை ஜின்ன சாகேபுக்கும் முஸ்லிம் லீகுக்கும் ‘மத்யஸ்த முறை” கசப்பாய் இருப்பதேன்?

மத்யஸ்தத்துக்கு விடுவதற்கு ஏதாவது நியாயமான குறைகள் இருந்தால் தானே ? இந்துக்கள் முஸ்லிம்களே அ/த்து விடுவார்கள், காங்கிரஸ்காரர்கள் ஆட்சி செய்து விடுவார்கள் என்று உண்மைக்கு விரோதமான விஷயங்