பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பொழுது புலர்ந்தது

மெம்பர்களுக்கு அளித்திருந்தனர். அதுதானே கியாய மாகும் ? காங்கிரஸ் தேச முழுவதுமுள்ள சகல வகுப்பாரு டைய நலன்களையும் காப்பதையே கடமையாகவுள்ள தனிப்பெரும் ஸ்தாபனம் அல்லவோ ? அந்த நியாயத்துக்கு விரோதமாக முக்கியமான இலாக்காக்களே யெல்லாம் காங்கிரஸ்-சம் லீகும் பங்குபோட்டுக் கொள்வது என்பது எப்படி கியாயமாகும்? அந்த லீக் கியாயத்தை எப்படி வேவல் ஒத்துக்கொள்ள முடியும்?

நீண்டகாலத் திட்டத்தை அமல் நடத்துவதற்காகவே இடைக்கால சர்க்கார் அமைக்கப்படும்பொழுது அதைப் பற்றி பின்னல் பார்த்துக் கொள்ளலாம் என்பதை என்ன வென்று கூறுவது ?

ஆதலால் வைஸி ராய் வேவல் பிரபு தமது அக்டோபர் 4-ம் தேதிக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு மறுத்து எழுதினர் :

(1) காங்கிரஸ் முஸ்லிமை நியமிக்கக்கூடாது என் பதை கான் ஒப்புக்கொள்ள முடியாது. இரண்டு கட்சியும் தத்தம் இஷ்டம்போல் நியமிக்கலாம்.

(2) இடைக்கால சர்க்கார் என்பது கூட்டு சர்க்கார். ஆதலால் முக்கியமான வகுப்புப் பிரச்னைகளே வோட் மூலம் முடிவு செய்வது சரிப்படாது. நட்பு முறையில் பேசியே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

(3) மாறி மாறி உபதலைவர் பதவி கொடுப்பது சாத் தியமில்லை. உபதலைவர் இல்லாத சமயம் முஸ்லிம் லீக் மெம்பருக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன்.

(4) எல்லா இலாகாக்களும் முக்கியமானவைகளே. சிறுபான்மைக் கட்சி மெம்பர்களுக்கும் முக்கியமான இலாக்காக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.