பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரும் சத்தியாக்ரகமும் 43

லுைம் சரி, உடனே சுதந்திரம் கிடையாது போலிருக் கிறது அல்லவா? இப்படிச் சிறுபான்மைக் கட்சியார்க்கு முட்டுக்கட்டைபோடும் உரிமையைக் கொடுத்து பெரும் பான்மைக் கட்சியாரை அடக்கவிடுவது சரியா என்று கியூ ஸ்டேட்ஸ்மன் என்னும் லண்டன் பத்திரிகை கேட்பது நியாயம்தானே?

சரி, இவை எல்லாம் வருங்காலத்தைப் பற்றியவை கள். அவைகளைப் பற்றிப் பின்னுல் பார்த்துக்கொள் வோம். இப்பொழுது உடனடியாகச் செய்யப்போகும் காரியம் யாது?

வைஸி ராய் தம்முடைய நிர்வாக சபையில் பிரதி கிதித் வம் வாய்ந்த சில இந்தியர்களைச் சேர்த்துக் கொள்வா ராம். யுத்த ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்துவாராம். யுத்த ஆலோசனை சபை மட்டும்தான் ஆலோ சனே ‘ சபையோ? கிர்வாக சபையும் ஆலோசனை சபை யன்றி வேறு என்ன ? கிர்வாக சபை மெம்பர்கள் யாருடைய பிரதிநிதிகள் ? ஜனங்கள் தேர்ந்தெடுக்காத தால் ஜனங்களுடைய பிரதிநிதிகள் அல்லர் ; சர்க்கா ருடைய பிரதிநிதிகளே ஆவர். அந்தப் பிரதிநிதிகள் யாருக்கு ஜவாப்தாரிகள் ? அவர்களை நியமிக்கும் வைஸி ராய்க்குத்தானே. அவர்களுடைய யோசனைப்படி வைஸி ராய் கடப்பாரா? அப்படி அவர் நடக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனல் அவர்கள் அவருடைய சொற். படியே நடக்கவேண்டும் என்ற கட்டாயம் உண்டு. இத் தகைய ஆலோசனை சபைகள் ஏற்படுத்தி எத்தனை ஆயிரம் இந்தியர்களைச் சேர்த்துக்கொண்டாலும் இந்திய மகாஜனங்களுக்கு என்ன நன்மை? இதைக் கேட்டு உற். சாகம் எள்ளளவேனும் உண்டாகுமோ?

இதுபோன்ற விஷயங்களே எல்லாம் எண்ணி :0காத்மா காந்தியடிகள்- வைஸி ராயின் அறிக்கை மன