பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பொழுது புலர்ந்தது


இதுதான் வைஸி ராயின் பேர்போன யோசனை. இதற்கும் 1939 அக்டோபரில் கூறிய யோசனைக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.

யுத்த முடிவில் புதிய அரசியல் அமைப்பை அமைக்க வழி செய்வோம் என்கிருரே, அதற்கான நிர்ணய சபை எப்படிப்பட்டதா யிருக்கும்? அந்த சபையும் யுத்தம் முடிந்து எவ்வளவு காலத்துக்குள் ஏற்படுத்தப்படும்? இவ்வளவு காலத்துக்குள் என்று ஏன் கூறக்கூடாது?

வேற்றுமைகள் கண்டு வருந்துகிருராமே, அந்த வேற்றுமைகளைச் சிருஷ்டித்தது யார்? அவர்கள் சிருஷ் டிக்காவிட்டாலும் வேற்றுகள் இருந்தால் அவைகளை ஒழிக்க வழிதேட வேண்டியது அரசாங்கமே அல்லவோ? அவர்கள் கினேத்தால் அது முடியாத காரியமா? அவர் கள் மட்டும் பூரண சுதந்திரம் அளிப்பதாகக் கூறட்டும், அடுத்த கிமிஷமே வேற்றுமைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பணிபோல் மறைந்து போகும்” என்று காந்தி யடிகள் கூறுவது உண்மையல்லவா?

சிறுபான்மைக் கட்சியாரை அடக்கவிடமாட்டோம் என்கிருரே, சிறுபான்மைக் கட்சியாரை அடக்கவேண் டும் என்று கூறுபவர்கள் யார்? சிறுபான்மைக் கட்சி யார்க்குத் திருப்தியான அளவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றல்லவோ காங்கிரஸ் கமிட்டியாரும் காந்தியடிகளும் கூறிவருகிறார்கள் ? அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று கிற்கும் முஸ்லிம் லீகைத் தவிர மற்ற ஐந்து பெரிய முஸ்லிம் சபையார்களும் இதர கட்சியார் களும் அந்தக் காங்கிரஸின் யோசனையைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் அல்லவா? இதை எல்லாம் கண்டும் காணுததுபோல் சிறுபான்மைக் கட்சியார், சிறு பான்மைக் கட்சியார் என்று பாடுவதைப் பார்த்தால் ஏதேனும் ஒரு கட்சி சம்மதிக்கமாட்டேன் என்று கூறி