பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரும் சத்தியாக்ரகமும் 41

என்று காங்கிரஸ் கமிட்டியார் புளு தீர்மானத்தின் மூலம் பிரிட்டிஷ் சர்க்காருக்குக் கூறினர்கள்.

இந்த யோசனையை சர்க்கார் ஏற்றுக்கொள்வார்கள் என்று இங்கிலாந்திலும் இந்தியாவிலும் அநேகர் எதிர் பார்த்தார்கள். ஆனல் அரசாங்கம் அளித்த பதில் யாது ?

வைஸி ராய் லின் லித்கோ பிரபு 1940 ஆகஸ்டு 8-ம்தேதி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதல்ை அது “ ஆகஸ்டு அறிக்கை “ என்று பெயர் பெற்றிருக் கின்றது. அது வெளியிட்டு நான்கு வருஷங்கள் ஆகின் றன. ஆயினும் அதன் சாரத்தையேதான் அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு வருகிறது. அப்படி சர்க்கார் விடாப்பிடியாகப் பிடித்து கிற்கும் அந்த அற்புத யோசனைதான் என்ன ? --

(1) யுத்தம் முடிந்தபின் எவ்வளவு சீக்கிரமாக இயலுமோ அவ்வளவு சீக்கிரமாக அரசாங்கம் இந்தியாவி அலுள்ள முக்கியமான வகுப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு இந்தியாவுக்கு வேண்டிய அரசியல் அமைப் பைத் தயாரிக்கும்படி செய்வார்கள்.

(2) இந்த நாட்டில் வேற்றுமைகள் மறையாது இருப்பது கண்டு வருந்துகிறார்கள். ஆயினும் பெரும் பான்மைக் கட்சியார் சிறுபான்மைக் கட்சியாரை அடக்க முயன்றால் அதற்குச் சிறிதும் இடங்கொடுக்கமாட்டார் கள்.

(3) இப்பொழுது யுத்த காலத்தில் பிரதிநிதித்வம் வாய்ந்த இந்தியர்களில் சிலர் வைஸி ராயின் நிர்வாக சபை யில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வைஸி ராய்க்கு யுத்த விஷயமாக ஆலோசனை கூற ஒரு யுத்த ஆலோ சனே சபை'யும் அமைக்கப்படும்.